எமது மாவீரர் நாள் நிகழ்வுகளை இராணுவம் தடுக்க முனைந்தால்,பதிலுக்கு தமிழ் அரசியல் கட்சிகளை தமிழர் தாயகத்தை விட்டு எமது மக்கள் வெளியேற்றவேண்டும்!

468

 

எமது மாவீரர் நாள் நிகழ்வுகளை இராணுவம் தடுக்க முனைந்தால்,பதிலுக்கு தமிழ் அரசியல் கட்சிகளை தமிழர் தாயகத்தை விட்டு எமது மக்கள் வெளியேற்றவேண்டும்!



போர்க்குற்ற விசாரணையை நீத்துப்போக வழிசமைத்த த.தே.கூட்டமைப்பின் இனத்துரோக செயல்பாடுகளின் பிரதிபலிப்பே மாவீரர் நாள் நிகழ்வுகளை இராணுவம் அனுமதிக்காதெனும் இராணுவ தளபதியின் கூற்றுக்கு அடிப்படை காரணம்.

இராணுவம் எமது மாவீரர் நாள் நிகழ்வுகளை தடுக்க முனைந்தால் வடகிழக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்றும் மக்கள் போராட்டங்கள் பாரிய அளவில் வெடிக்கும்.

எமது மக்களின் பொறுமையை இராணுவம் சோதிக்க முனைவது மீண்டும் ஒரு இனமுறுகலுக்கு வழிவகுக்கும்.

இலங்கையில் இரண்டு மொழிக்குரிய இனங்களுக்கிடையிலான சமநிலை பேணப்படாவிடின் மீண்டுமொரு இனப்போர் மூழும் அபாயம் எழும் என்பதை ஒற்றையாட்சிபற்றி சிந்திப்பவர்களும்,ஒரே நாடு ஒரே மக்கள்,ஒரே இரத்தம் என்று பகட்டுக்கு மேடைகளில் ஒற்றுமை பாராட்டும் சிங்கள தலைவர்களும் முதலில் புரிந்துகொள்ளவேண்டும்.

புலிகளை ஆயுதமுனையில் அடக்கிவிட்டதாக ஒருபக்கம் கூறிக்கொண்டு,மறுமுபக்கம் மீண்டும் புதிய புலிகளை உருவாக்கும் இலங்கை அரசின் சதித்திட்டத்தின் ஓர் அங்கமாகவே எமது இனத்துக்காக மடிந்த மாவீரர்களின் நினைவு நாளினை இலங்கை அரசு தனது இராணுவ படைகளை பயன்படுத்தி குழப்பியடிப்பதற்கு திட்டமிடுவதற்கான அடிப்படை காரணம்.

இந்த குழப்பநிலையை இலங்கை அரசு கைவிடாவிட்டால்,தாயகம் தேசியம் தன்னாட்சி உரிமை எனும் எமது தனித்தேச கோரிக்கையை உலகளாவிய அளவில் எமது மக்கள் தாம் வாழும் அரசுகளை நோக்கி வலியுறுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் அதிகரிக்கும் என்பதனை இங்கே நாம் சுட்டிக்காட்டுவது அவசியமானது.

மேலும் இலங்கை இராணுவத் தளபதியின் மாவீரர் நாள் தொடர்பான தடைவிதிக்கும் அறிக்கைக்கும் நடந்துமுடிந்த தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அவர்களின் நிகழ்வுகளுக்கும் ஏதோவொரு தொடர்பிருப்பதாக சில உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.அந்த தொர்புகள் எவை என நாம் பரிசீலித்தபோது த.தே.கூட்டமைப்பின் சுமந்திரன் அவர்களின் திட்டமிடப்பட்ட உள்ளக ஏற்பாடாகவும் இது இருக்கலாம் என்றும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

தியாக தீபத்தின் நினைவு நாளினை இலங்கை பொலிசாரை பயன்படுத்தி தடுக்கமுற்பட்டதுபோன்று,நடைபெறவிருக்கும் எமது மாவீரர் நாள் நிகழ்வுகளை இலங்கை இராணுவத்தை பயன்படுத்தி தடுப்பதற்கு சுமந்திரன் அவர்கள் முயன்றிருக்கலாம்?என்றும் சில நம்பத்தகுந்த தகவல்கள் ஊடாக நாம் அறியமுடிகின்றது.

எதுவானாலும் இம்முறை நடைபெறவிருக்கும் மாவீரர் நாள் நிகழ்வுகளை இலங்கை அரசு தடுக்க முனைந்தால் தமிழர் தாயகம் எங்கும் ஓர் இயல்பற்ற அசாதாரண சூழ்நிலையொன்று உருவாகும் என்பதில் சந்தேகமில்லை.

அப்படியான சம்பவங்கள் எதுவும் நடைபெறாதவரை ஒரே நாடு,ஒரே மக்கள் ஒரே இரத்தம் எனும் சிங்கள அரசின் போலியான வார்த்தைகள் ஓரளவு நடைமுறையில் இருக்கும்.இல்லை ஏதும் விபரீதமான முடிவுகளை இலங்கை அரசு தான் எடுக்குமாயின் அதற்கு இராகுகாலம் ஆரம்பித்துவிட்டதாகவே நாம் கூறமுடியும்.

உண்மையில் இலங்கை இராணுவ தளபதியின் நேற்றைய இறுக்கமான முடிவுகளுக்கு அவரை ஊக்குவித்தவர்கள் எமது பச்சோந்தி அரசியல்வாதிகள்தான் என்பதும்,இந்த பச்சோந்திகளால்தான் இலங்கை அரசை சூழ்ந்திருந்த சர்வதேசத்தின் பிடிகள் சற்று தளர்ந்து வருவதற்கும் முதன்மை காரணம்.

ஒருவேளை எமது மாவீரர் நாளை இலங்கை அரசபடைகள் தாம் தடுக்கமுனைந்தால் அதன் சூத்திரதாரிகளான த.தே.கூட்டமைப்பு உட்பட்ட அனைத்து கட்சிகளினதும் அரசியல் செயல்பாடுகளும் எமது மக்களால் வெகுசனப் போராட்டங்கள்மூலம் பாரிய அளவில் முடக்கப்படும் என்பதை நாம் உறுதியாக எதிர்பார்க்க முடியும்.

 

SHARE