எமி ஜாக்சனின் லிப்லாக் முத்தக்காட்சி வைரலாகும் வீடியோ

278

உலகம் முழுவதும் பிரபலமான சூப்பர் கேர்ள் சீரியலில் லிப் லாக் முத்தக்காட்சியில் எமி ஜாக்சன் நடித்திருந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

உலகம் முழுவதும் பிரபலமானது அமெரிக்கா சீரியல் சூப்பர் கேர்ள். இந்த சீரியலுக்கு கோடிக்கணக்கில் ரசிகர்கள் இருக்கின்றனர். தற்போது இந்த சீரியலின் முதல் சீசனில் ரஜினியின் 2.0 ஹீரோயின் எமி ஜாக்சன் நடித்துள்ளார்.

லண்டன் ஹீரோயினான எமி, படத்திற்கு ஏற்றவாறு எவ்வளவு வேண்டுமானாலும் கவர்ச்சியில் நடிக்க ரெடியாகயிருப்பவர். இந்த நிலையில், இவர் நடித்திருக்கும் சூப்பர் கேர்ள் சீரியலின் முதல் சீசனில் எமி ஜாக்சன் லிப் லாக் முத்தக்காட்சியில் நடித்திருக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இங்கிலாந்தின் மாடலாகவும் வலம் வரும் எமி பல முன்னணி நிறுவனங்களின் விளம்பரங்களில் நடித்து அந்நிறுவனங்கள் தயாரிக்கும் வியாபாரப் பொருட்களுக்கு விளம்பரத் தூதுவராகவும் இருந்து வருகிறார்.

மதராசபட்டிணம், ஐ, தங்கமகன், தெறி உள்பட சில தமிழ் படங்களில் நடித்துள்ள எமி தற்போது ரஜினியின் 2.0 படத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில், இப்படம் வெளியாவதற்கு முன்பு இந்திய சினிமாவிற்கு கொஞ்சம் ஓய்வு கொடுத்துவிட்டு ஹாலிவுட் சீரியல்களில் நடித்த தொடங்கிவிட்டார்.

 

SHARE