எமி ஜாக்ஸன் ஐ படத்தின் மூலம் இந்தியா முழுவதும் அறியப்பட்டவர். இப்படத்திற்கு பிறகு இவர் டோலிவுட், பாலிவுட் என பிஸியாகிவிட்டார்.
தற்போது இவர் ரஜினிகாந்த் நடிக்கும் 2.0 படத்தில் முக்கியமான ரோலில் நடித்துள்ளார், இந்நிலையில் எமி சமீபத்தில் தன் டுவிட்டரில் ஒரு புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார்.
அதில் லிபியாவில் நடந்து வரும் அடிமைத்தனத்தை சுட்டிக்காட்டி தயவு செய்து இதை நிறுத்த வேண்டும், இந்த புகைப்படங்கள் என் இதயத்தை நொறுக்கிவிட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார்.