எம்பிலிபிட்டிய மரணம், OIC மீது சந்தேகம்

318

எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற விருந்துபசாரத்தில் சுமித்த பிரசன்ன என்பவரின் மரணம் தொடர்பிலான சந்தேகநபர்களை கைதுசெய்யுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

எம்பிலிபிட்டிய மேலதிக நீதவான் பிரசன்ன பிராணாந்து முன்னிலையில் இன்றைய தினம் (27) இடம்பெற்ற வழக்கு விசாரணையின்போதே நீதவான் இவ்வுத்தரவை வழங்கியிருந்தார்.

வழக்கு விசாரணையின்போது, இம்மரணம் தொடர்பில், தனக்கு எம்பிலிபிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மீது சந்தேகம் இருப்பதாக பிரசன்னவின் மனைவி சாட்சியமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 31 ஆம் திகதி இடம்பெற்ற இச்சம்பவத்தில், இரு மாடிக் கட்டடத்திலிருந்து வீழ்ந்த குறித்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தநிலையில் இம்மாதம் 07ஆம் திகதி உயிரிழந்தார்.

அதன் பின்னர் குறித்த பிரதேசத்தில் அமைதியின்மை ஏற்பட்டதோடு, மரண ஊர்வலத்திற்கு தடை விதிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.sumith-prasanna-wife

SHARE