எம்பிலிப்பிட்டிய விவகாரம்! உதவி பொலிஸ் அத்தியட்சகருக்கு விளக்கமறியல் நீடிப்பு

291

எம்பிலிப்பிட்டியவில் பொலிஸாருடன் ஏற்பட்ட மோதல் ஒன்றின் போது இளைஞர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் கைது செய்யப்பட முன்னாள் உதவி பொலிஸ் அத்தியகட்சகர் நாளை வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

எம்பிலிப்பிட்டிய மேலதிக நீதவான் முன்னிலையில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.

குறித்த சம்பவத்தில் பலியான சுமித் பிரசன்ன சடலத்தை மீண்டும் தோண்டி எடுப்பதா இல்லையா என்பது தொடர்பாக நாளை தீர்ப்பு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE