எம்பிலிப்பிட்டி இளைஞர் மரணம்! பொலிஸார் ஒழுக்க விதிகளை மீறியுள்ளனர்!

552
sumith3-626x380

எம்பிலிப்பிட்டி இளைஞர் மரணம் தொடர்பான சம்பவத்தில் பொலிஸார் ஒழுக்க விதிகளை மீறிச் செயற்பட்டுள்ளனர் என பொலிஸ் ஆணைக்குழு குற்றம் சுமத்தியுள்ளது.

எம்பிலிட்டியில் இளைஞர் ஒருவர் மரணமான சம்பவம் தொடர்பில் பிரதேசத்திற்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் அத்தியட்சகர் உள்ளிட்ட 15 பொலிஸ் உத்தியோகத்தர்கள் நிறுவன ஒழுக்கக் கோவைக்கு புறம்பாக செயற்பட்டுள்ளனர் என தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எனவே, இந்த அதிகாரிகள் உத்தியோகத்தர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட குழுவினர் ஆலோசனை வழங்கியுள்ளனர் என ஆணைக்குழுவின் தலைவர் ஆரியதாச குரே தெரிவித்துள்ளார்.

குற்றப் பத்திரிகை தயாரிக்கப்பட்டதன் பின்னர் அதனை பரிசீலனை செய்து அதிகாரிகள் உத்தியோகத்தர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதா இல்லையா என்பது தீர்மானிக்கப்படும் என கொழும்பு பத்திரிகை ஒன்றுக்கு குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் பிரதிப் பொலிஸ் அத்தியட்சகர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE