எம்.பிக்கள் கார் கொள்வனவு செய்ய ஒரு கோடி கடன்

243
நாடாளுமன்ற உறுப்பினர்கள் கார் கொள்வனவு செய்வதற்காக சலுகை வட்டி அடிப்படையில் ஒரு கோடி ரூபா கடன் வழங்கப்பட உள்ளது.
100 லட்சம் ரூபா நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கடன் வழங்குமாறு நிதி அமைச்சர், அரச வங்கிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
எவ்ளவு வட்டி வீதம் என அறிவிக்கப்படாத போதிலும் 4 வீத வட்டியில் கடன் வழங்குமாறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக வங்கி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வளவு வட்டி வீதத்திற்கு கடன் வழங்கப்பட வேண்டும் என்பது குறித்து அறிவிக்குமாறு நிதி அமைச்சிடம் அரச வங்கி பிரதானிகள் கோரிக்கை விடுக்கவுள்ளனர்.
SHARE