எரிவாயு பலூன் உடைந்து வீழ்ந்தமையினால் குழப்பம்

253

குருணாகலில் திடீரென வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுடன் எரிவாயு பலூன் ஒன்று தரையிறங்கியமையால் அந்தப் பகுதியில் குழப்ப நிலை ஏற்பட்டது.

தொடம்கஸ்லந்த – மீபிட்டிய பிரதேசத்தில் உள்ள வயல் ஒன்றில் திடீரென 14 வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுடன் எரிவாயு பலூன் ஒன்று தரையிறங்கியுள்ளது.

இந்த பலூன் தரையிறங்கியமையினால் வயல் நிலத்தில் பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனினும் அந்த பலூன் திடீரென தரையிறக்கப்படவில்லை எனவும் அது உடைந்து விழுந்துள்ளதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

எப்படியிருப்பினும் தாம் அவசரமாக தரையிறங்கியதாகவும் பலூன் வயில் மீது இறங்கி விட்டதாகவும், பலூனில் இருந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தெரிவித்துள்ளனர்.

வயிலில் ஏற்பட்ட தேசத்திற்கு அபராதம் செலுத்துமாறு பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

SHARE