அறிவுமைய அபிவிருத்தியை உறுதி செய்துகொள்வதற்கான ஆரம்பப் பாடசாலைகள் மற்றும் இடைநிலைப் பாடசாலைகளை மீளமைக்கும் தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் கல்வி அமைச்சின் நிதிஒதுக்கீட்டின் மூலம் குறித்த இரு கட்டிடங்களும் நிர்மாணிக்கப்பட்டிருந்தது.
குறித்த கட்டிடங்களில் பல பிரிவுகளை வட மாகாண முதலமைச்சருடன் இணைந்து அதிதிகள் பலரும் மாணவர்களின் கல்வி நடவடிக்கையிணை மேம்படுத்த பாவணைக்கு இன்று திறந்துவைத்தனர்.
இதன்படி உயிரியல் ஆய்வு கூடம், இராசாயன ஆய்வு கூடம், கணித ஆய்வு கூடம், பௌதீக விஞ்ஞான ஆய்வுகூடம், தகவல் மற்றும் தொடர்புசாதன தொழிநுட்ப மத்திய நிலையம் உள்ளிட்ட மேலும்பல பிரிவுகள் இவ்வாறு திறந்து வைக்கப்பட்டது
இதணை தொடர்ந்து பாடசாலை ஒன்றுகூடல் மண்டபத்தில் இது தொடர்பாக நிகழ்வுகள் நடைபெற்றன.
இதன் போது வடமாகாண முதலைமைச்சர் குறித்த பாடசாலையில் பல்கலைகழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவ மாணவிகளுக்கு நிணைவு சின்னம் மற்றும் பரிசில்களை வழங்கிவைத்தார்.
இதேவேளை இந்த நிகழ்வில் மன்னார் வலய கல்வி பணிப்பாளர் செ.சுகந்தி, வட மாகாண சபை உறுப்பினர் பிறிமுஸ் சிராய்வா, வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.