எலிகளுக்காகவே உருவாக்கப்பட்டுள்ள சிறிய உணவகங்கள் – வரிசையில் நிற்கும் எலிகள்

224

உணவகங்கள் என்பது பெரும்பாலும் மனிதர்களின் பயன்பாட்டுக்காகவே பயன்படுத்தப்படுகின்றது. வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளுக்கும் ஆங்காங்கே சில இடங்களில் உணவகங்கள் காணப்படுகின்றது.

ஆனால் உணவுகள் நிரப்பப்பட்ட சிறிய உணவகங்கள் எலிகளுக்காகவே உருவாக்கப்பட்டுள்ளது என்றால் நம்பமுடிகின்றதா?

ஆம் எலிகளுக்கான இந்த சிறிய உணவகங்கள் சுவீடன் நாட்டில் எலிகளுக்காக பிரத்தியேகமாக அமைக்கப்பட்டுள்ளன.

இதில் எலிகள் சாப்பிடுவதற்காக காத்திருக்கின்றமை அனைவராலும் சிறப்பாக பார்க்கப்படுகின்றது.

குறித்த சிறிய உணவகங்களை அமைப்பதற்காக அதிக நேரம் செலவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுவீடனில் உள்ள மெல்மோ நகரிலேயே 70 × 30 சென்றிமீற்றர் அளவில் குறித்த உணவகங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகவும், எலிகள் தங்களுக்கு விருப்பமான உணவுகளை தெரிவு செய்துக்கொள்ளவும் முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த கடைகளுக்கு வெளிப்புறத்தில், எலிகளின் இசை நிகழ்ச்சிகள் மற்றும் பிற நிகழ்வுகள் பற்றிய சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டுள்ளன.

எலிகளுக்கான உணவுகளுடன் சீஸ் வகைகள், நட்ஸ்(nuts) வகைகள் வெளியில் தனியாக வைக்கப்பட்டுள்ளன.

குறித்த உணவகத்தில் எலிகள் அமர்ந்து உண்பதற்கான இருக்கை வசதிகளும் கூட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

625-0-560-320-160-600-053-800-668-160-90-3-copy 625-0-560-320-160-600-053-800-668-160-90-4 625-0-560-320-160-600-053-800-668-160-90 625-256-560-350-160-300-053-800-461-160-90

 

SHARE