எலிசபெத் மகாராணியின் அவசர அழைப்பு! என்ன பிரச்சனை?

193

பிரித்தானியா முழுவதும் இருக்கும் ராஜவம்ச ஊழியர்கள் அனைவரும் எலிசபெத் மகாராணியின் அரண்மனைக்கு உடனடியாக வர வேண்டும் என அவசர அழைப்பு விடுக்கபட்டுள்ளது.

பிரித்தானியாவின் மகாராணி இரண்டாம் எலிசபெத் Buckingham அரண்மனையில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், அரண்மையின் தலைமை ஊழியர்கள் பிரித்தானியா முழுவதும் இருக்கும் ராஜவம்ச ஊழியர்களை அவசர சந்திப்புக்கு இன்று அரண்மனைக்கு வர சொல்லியுள்ளார்கள்.

எலிசபெத் மகாராணி அல்லது இளவரசர் பிலிப் குறித்து ஏதாவது அவசர அறிவிப்பு வெளியாகும் என சமூகவலைதளங்களில் செய்திகள் பரவி வருகிறது.

91 வயதான எலிசபெத் மகாராணி நேற்று பிரித்தானிய பிரதமர் தெரசா மே-வை சந்தித்து பொதுத் தேர்தலுக்காக பாராளுமன்றம் கலைக்க போவதை பற்றி விவாதித்தார்.

அதே போல இளவரசர் பிலிப் நேற்று லார்ட்ஸ் கிரிக்கெட் மைதான அரங்கை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

ஊழியர்களுடான சந்திப்புக்கு பிறகு ஏதாவது அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.

SHARE