எல்லாத் தமிழர்களுக்கும் நான் முன்னுதாரணமாக இருக்கவேண்டும்: ‘கபாலி’ இயக்குநர் பா. இரஞ்சித் விருப்பம்

250

கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் கபாலி. பா. இரஞ்சித் இயக்கியுள்ளார். இந்தப் படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது.

இந்நிலையில் கபாலி படக்குழு செய்தியாளர்களை நேற்று சந்தித்தது. அப்போது இயக்குநர் பா. இரஞ்சித் கூறியதாவது:

தலித் மக்களின் குரலை வெளிப்படுத்தும் இயக்குநராக மட்டும் நான் இருக்கவில்லை. சாதி வேறுபாடுகள் குறித்து என் படங்களில் வெளிப்படுத்தியுள்ளேன். ஏனெனில் நான் அவற்றால் பாதிக்கப்பட்டவன். இல்லாவிட்டாலும் சமுதாயத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளை என் படத்தில் தொடர்ந்து சொல்பவனாக இருப்பேன். தலித் மக்களுக்கு மட்டுமில்லாமல் எல்லாத் தமிழர்களுக்கும் நான் முன்னுதாரணமாக இருக்கவேண்டும். இதுதான் என் விருப்பம் என்றார்.

SHARE