விஜய் சேதுபதி தான் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு படங்களின் மூலமும் வித்தியாசப்பட்டு தெரிகிறார் . இதுவே அவரின் திறமைக்கான தனி அடையாளமாக அமைந்து வருகிறது.
சொல்லப்போனால் அவரின் படங்களுக்கு வரவேற்பு கூடிவருகிறது. கடந்த எட்டு வருடங்களில் ஒரு ஹீரோவாக நடித்து தற்போது 25 படத்தில் வந்து நிற்கிறார். பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், இதற்குத்தானே ஆசை பட்டாய் பாலகுமாரா படங்கள் அவருக்கு வெற்றியை கொடுத்தது.
பின் சில படங்கள் அவருக்கு சருக்கலாய் அமைந்தாலும் மீண்டும் நானும் ரவுடி தான் அவருக்கு திருப்பு முனையாக அமைந்தது. அதன் பின் வந்த காதலும் கடந்து போகும், இறைவி, ஆண்டவன் கட்டளை படங்களுக்கு நல்ல வரவேற்பு. மேலும் கவண் படம் மக்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டது.
சேதுபதி, தர்மதுரை, விக்ரம் வேதா ஆகிய படங்கள் சிறப்பான வரவேற்பை பெற்றுத்தந்துள்ளது. இதனை தொடர்ந்து அவருக்கு ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன், 96, ஜுங்கா, சூப்பர் டீலக்ஸ் என படங்கள் வரவுள்ளது.
அவரின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று அவரின் அடுத்த படமான சீதக்காதி First Look வெளியானது.இதில் விஜய் சேதுபதி தானா இது என அவரின் தோற்றம் எல்லோரையும் கேட்க வைத்தது.
இதை நீங்கள் நமது தளத்தில் நேற்றே பார்த்திருப்பீர்கள். தற்போது இந்த கேரக்டரின் பெயர் அய்யா என தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை பாலாஜி தரணிதரன் இயக்குகிறார்.
தற்போது நடிகரும், இயக்குனருமான சமுத்திரகனி 100 ஆண்டுகள் வாழ்க என விஜய் சேதுபதியை வாழ்த்தியுள்ளார்.
இன்னும் பல சாதனைகள் புரிய வாழ்த்துக்கள்…