எழுநீ விருது தொடர்பாக குறித்த ஊடகவியலாளரின் சுயநல கருத்திற்கு ஒட்டுமொத்த ஊடகவியலாளர்களும் பலிக்கிடாய் ஆகமுடியாது..!

224

பணத்திற்காகவும் அரசியலுக்காகவும் கலை கலாச்சார நிகழ்வுகள் என்ற போர்வையில் வழங்கப்படுகின்ற விருதுகளை ஊடகவியலாளர்கள் புறக்கனிக்கப்படவேண்டும்.

எழுநீ விருதில் மட்டுமல்ல வவுனியாவில் வழங்கப்பட்ட அனைத்து விருதுகளிலும் தவறுகள் இடம்பெற்றுள்ளன. அதையெல்லாம் கண்டும் காணமல் விட்டது போல் இதையும் விட்டிருந்தால் எந்தப் பிரச்சனையும் ஏற்பட்டிருக்காது அனைத்து விருதுகளும் வெளிப்படையான தெரிவின்மையினாலையே பிரச்சனைகள் ஏற்படுகின்றது.

நாட்டின் அரசியல் நெருக்கடி காரணமாக தமது அரசியல் இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்காக ஒவ்வொரு கட்சிகளும் கலை கலாச்சார் நிகழ்வுகள் பாடசாலை நிகழ்வுகள் மரணச்சடக்குகள் பொது விழாக்கல் போன்வற்றில் கலந்து கொண்டு தம்மை பிரசித்திப் படுத்திக்கொள்வது வழமையான ஒன்று பெரும்பாண்மையான கட்சிக்காரர்கள் ஊடகவியலாளர்களுக்கு விருது வழங்கி அவர்களுக்கு பணம் கொடுத்து தமது பக்கம் திசைதிருப்பிக் கொள்வதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுப்பது வழமையானதொன்று.

அதற்காக கட்சி அரசியல் செய்பவர்கள் விருது வழங்கக் கூடாது என்றும் அல்ல கலைஞர்களுக்கு கௌரவிப்பு கொடுக்கக்கூடாது என்றும் அல்ல. அதை யார் செய்தாலும் ஊடகங்களுக்கான பணி என்னவென்றால் அதனை அந்தந்த ஊடகநிறுவனங்களிடம் விடையத்தைக் கூறி செய்திகளை பிரசுரிப்பது மட்டும் தான். அல்லது அது தொடர்பான விமர்சனங்களை முன்வைப்பது.

ஒரு சில ஊடகவியலாளர்களுக்கு விருது வழங்கப்பட்டும் ஒரு சில ஊடகவியலாளர்களுக்கு விருது வழங்கப்படாது இருக்கின்ற பொழுது அதனை பாகு பாடாக நாம் எடுத்துக் கொள்ளக் கூடாது. விருதுகள் என்பது ஒருவர் எப்படி பெற்றுக் கொள்ளவேண்டும் என்பதற்கு சிறந்த உதாரணமாக உலகில் தலை சிறந்த அறிவிப்பாளரும், ஊடகவிலாளருமாகிய B.H. அப்துல்கமித்தை எடுத்துக்காட்டலாம்.

வீடியோ

Posted by Thinappuyal News on Rabu, 28 November 2018

இவ்வாறே ஊடகவியலாளர்கள் விருதுகளைப் பெற்றுக் கொள்ளவேண்டும். பொது நிகழ்வாக ஏற்படு செய்யப்பட்டிருக்கின்ற நிகழ்வுகளில் ஊடகவியலாளர்கள் பாராட்டப்படுவதும் விருதுகள் வழங்குவதும் வழமையானதொன்று. தமிழரசுக் கட்சியாக இருந்தாலும் சரி அல்லது ஏனைய கட்சிகளாக இருந்தாலும் சரி தமது கட்சிக்களை வளர்த்துக் கொள்வதற்காகவே நிகழ்வுகளை ஏற்பாடு செய்வார்கள். அல்லது அரச தரப்பு கட்சிகளாக இருந்தாலும் நிலமை அதுவே. இதில் குறிப்பாக ஊடகவியலாளர்கள் மோதிக் கொள்வது அர்த்தமற்றதொன்று.

இவ் ஊடகவிமர்சனங்களுக்கு மக்களும் ஏனைய முகநூல் நண்பர்களும் தகாத வார்த்தைப் பிரயோகங்களினாலும் ஊடகவியலாளர்கள் திட்டித் தீர்த்துக் கொள்கின்றார்கள் பணம் வாங்கி விருதுகள் பெற்றுக் கொள்வதாகக் கூறுகின்றார்கள். இவ்வாறு ஒரு பழிச் சொல்லைக் கேட்டுவிட்டு ஊடகவியலாளர்கள் குறித்த விருது வழங்களைப் பெற்றுக் கொள்வதென்பது பொருத்தமற்றதொன்று. அவ்வாறான விருதுகளைப் பெற்றுக் கொள்வோமாக இருந்தால். பணம் கொடுத்துத்தான் விருது வாங்குகின்றார்கள் என்ற கூற்று உண்மையாகின்றது. எமது நாட்டின் எப்பிரதேசத்தில் ஆயினும் கலை கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை எந்தக் கட்சி மேற்கொண்டாலும் அதற்கு ஊடகங்கள் ஆதரவு வழங்கி இலை மறை காய்களாக இருக்கக் கூடிய கலையர்களை உச்சாகப்படுத்தவேண்டும். விருது வழங்கும் வைபவங்களில் தவறு இருக்கும் என்பது அது தொடர்பாக கலை கலாச்சார அலுவலகத்தில் முறைப்பாடுகள் செய்வது தொடர்பான விடையங்கள் எல்லாம் ஒரு அர்த்தமற்றதொன்றும், அநாகரிகமானதொன்றும் ஆகும்.

தமிழ் மக்கள் ஆகிய நாம் தேசியம், சுயநிர்ணயம் என்ற இலங்கை இதுவரையில் அடையவில்லை. அதனை நெறிப்படுத்தும் வகையில் ஊடாகபோராளிகள் இதுவரை முப்பந்தைந்து பேர் இந் நாட்டிட்காக தங்களை தியாகம் செய்துள்ளார்கள். இவர்களுடைய எழுத்துக்கள் எப்படி இருந்தது. இவர்களுடைய செயற்பாடுகள் எப்படிப்பட்டவை என்று நாம் சற்றுப் புரட்டிப் பார்க்கவேண்டும். அப்பொழுது தான் ஊடகவியலாளர்களை விலைக்கு வாங்குகின்ற பலருக்கும் நாம் தக்கபாடம் கொடுக்கவேண்டும்.

அற்புதமான கதை

அற்புதமான கதை

⚀ ” ஒரு ஊரில் ஒரு செல்வந்தன் இருந்தான். அவன் வியாபார நிமித்தமாக வெளியூர் சென்று திரும்பிய போது அவனது அழகான பெரிய பண்ணை வீடு தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது.

⚁ “அந்த ஊரிலேயே மிகவும் அழகான வீடு அவனுடையது தான். .

⚂ “அந்த வீட்டை இரண்டு மடங்கு விலை கொடுத்து வாங்க பலரும் தயாராக இருந்தனர். ஆனால் இவன் விற்கவில்லை.

⚄ “இப்போது அந்த வீடு அவன் கண் முன்னே எரிந்துகொண்டிருந்தது.

⚁ “ஆயிரம் நபர்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார்கள். தீ முழுவதுமாக பரவிவிட்டதால் அதை அணைத்தும் பிரயோஜனம் இல்லை என்று எந்த முயற்சியும் எடுக்கவில்லை. .

⚄ “வணிகனோ செய்வதறியாமல் கண்ணில் நீரோடு புலம்பிகொண்டிருந்தான்.

⚀ “ஐயோ என் வீடு ! என் வீடு ! என்று அலறினான்.

⚁ “அப்போது அவனின் மூத்த மகன் ஓடிவந்து ஒரு விஷயத்தை சொல்கிறான் “தந்தையே ஏன் அழுகிறீர்கள் ?

⚁ “இந்த வீட்டை நான் நேற்றே மூன்று மடங்கு லாபத்திற்கு விற்றுவிட்டேன். .
⚀ “இதனால் நமக்கு நஷ்டம் இல்லை என்று கூறினான்.

⚃ “இதை கேட்ட வணிகனுக்கு ஏக மகிழ்ச்சி.

⚄ “அவனது சோகம் அனைத்தும் மறைந்து மகிழ்ச்சி உண்டானது.

⚂ ” இப்போது வணிகனும் கூடி இருந்த கூட்டத்தில் ஒருவனாக நின்று வேடிக்கை பார்க்க தொடங்கினான்.

⚀ ” அதே வீடு தான் ” ,

⚁ ” அதே நெருப்பு தான் ” ,

⚃ “ஆனால் சில வினாடிகளுக்கு முன் இருந்த தவிப்பும் சோகமும் இப்போது அவனிடம் இல்லை.

⚀ “” சிறிது நேரத்தில் வணிகனின் இரண்டாவது மகன் ஓடி வந்து “தந்தையே ஏன் இப்படி கவலையில்லாமல் சிரிக்கிறீர்கள்?

நாங்கள் விற்ற இந்த வீட்டிற்கு முன்பணம் மட்டுமே வாங்கியுள்ளோம்.
முழு தொகை இன்னும் வரவில்லை.

⚃ “வீட்டை வாங்கியவன் இப்போது மீதி பணத்தை தருவானா என்பது சந்தேகமே” என்றான்.

⚁ “இதை கேட்ட வணிகன் அதிர்ச்சி அடைந்தான். மீண்டும் சோகத்தில் ஆழ்ந்தான். கண்ணீரோடு மீண்டும் புலம்ப ஆரம்பித்தான்.

⚀ “தனது உடமை எரிகிறதே என்ற எண்ணம் மீண்டும் அவனை வாட்டியது.

⚃ “சில மணித்துளிகள் பின்பு வணிகனின் மூன்றாவது மகன் ஓடி வருகிறான்.

“தந்தையே கவலை வேண்டாம். இந்த வீட்டை வாங்கிய மனிதன் மிகவும் நல்லவன் போலும்.

⚃ “இந்த வீட்டை வாங்க அவன் முடிவு செய்தபோது வீடு தீ பிடிக்கும் என்று உங்களுக்கும் தெரியாது எனக்கும் தெரியாது.

⚀ “ஆகையால் நான் பேசியபடி முழு தொகையை கொடுப்பது தான் நியாயம் என்று என்னிடம் இப்போது தான் சொல்லி அனுப்பினான்” என்று மகிழ்ச்சியோடு தெரிவித்தான்.

⚀ “இதை கேட்ட வணிகனுக்கோ ஏக சந்தோஷம்.

⚀ “கடவுளுக்கு நன்றி சொல்லி ஆடிப்பாடி மகிழ்ந்தான். கண்ணீரும் சோகமும் மீண்டும் காணாமல் போய்விட்டது.

⚀ “மீண்டும் கூட்டத்தில் ஒருவனாக நின்று வேடிக்கை பார்க்க தொடங்கினான்.
⚀ ” இங்கு எதுவுமே மாறவில்லை ” ,

⚀ ” அதே வீடு, அதே நெருப்பு, அதே இழப்பு “,

⚀ ” இது என்னுடையது என்று நினைக்கும் போது அந்த இழப்பு உங்களை சோகத்தில் ஆழ்த்துகிறது.

⚀ ” இது என்னுடையது அல்ல என்று நினைக்கும் போது உங்களை சோகம் தாக்குவது இல்லை. .

⚀ ” நான், என்னுடையது, எனக்கு சொந்தமானது என்ற எண்ணம் தான் பற்று.

⚀ “உலகில் எதுவுமே நிரந்தரமானது இல்லை.

⚀ ” ஒருவனுக்கு மட்டுமே சொந்தமானது இல்லை. அனைத்துமே அழிய கூடியது.

 

SHARE