சட்டமா அதிபர் திணைக்களம் அண்மையில் எவண்ட் கார்ட் மிதக்கும் ஆயுதக் களஞ்சியம், கே.பி.க்கு எதிரான வழக்கு உள்ளிட்ட முக்கிய வழக்குகளில் போதுமான சாட்சியங்கள் இல்லை என்று வழக்கைத் திரும்பப் பெற்றுக் கொண்டிருந்தது.
இது அரசாங்கத்துக்குள் கடும் கருத்து வேறுபாட்டை ஏற்படுத்தியுள்ளது. சட்டமா அதிபரின் செயற்பாடுகளில் அரசியல் தலையீடுகளை மேற்கொள்வது நீதித்துறையில் தலையிடுவதற்கு ஒப்பானதாகும் என்று ஒரு சில அமைச்சர்கள் கருதுகின்றனர்.
ஆனால் ராஜித சேனாரத்ன போன்ற ஒருசில அiமைச்சர்கள், சட்டமா அதிபர் விடயத்தில் அரசாங்கம் கடுமையான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
எவண்ட் கார்ட் வழக்கில் சாட்சியங்கள் இல்லை, கே.பி. வழக்கில் சாட்சியங்கள் இல்லை என்றால் சடடமா அதிபரும் இல்லை என்றே கூறவேண்டியது தானே என்று இது தொடர்பாக அமைச்சர் ராஜித சேனாரத்ன காட்டமாக விமர்சனம் செய்திருந்தார்.
ஆனால் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள முன்னாள் நீதி அமைச்சர் ஜோன் செனவிரத்ன, சட்டமா அதிபரை இந்த விடயத்தில் குற்றம் சாட்ட முடியாது என்று தெரிவித்தார். இது தொடர்பாக பொலிசார் மற்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளே பொறுப்புக் கூற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறாக சட்டமா அதிபரின் செயல்பாடுகள் காரணமாக அரசாங்கத்துக்குள் கடும் கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.
சம்பவத்தில் சட்டமா அதிபர் நடந்து கொண்ட முறையின் காரணமாக அரசாங்கத்துக்குள் கடும் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது.