எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய, தமிழர் என்ற சாதனையை படைத்த ஊட்டி இராணுவ வீரருக்கு மகத்தான வரவேற்பு!

257

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய, தமிழர் என்ற சாதனையை படைத்த ஊட்டி இராணுவ வீரருக்கு, அவரது சொந்த ஊரில் மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம், ஊட்டி லவ்டேல் பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார், இந்திய இராணுவத்தின் மெட்ராஸ் ரெஜிமென்ட் இரண்டாம் படைப்பிரிவில் அவர் பணியாற்றி வருகிறார்.

இந்திய இராணுவக்குழு சார்பில் தெரிவு செய்யப்பட்ட, 14 பேர் கொண்ட எவரெஸ்ட் மலை ஏறும் குழுவில் சிவகுமாரும் இணைத்துக்கொள்ளப்பட்டார்.

இந்நிலையில் கடந்த மே மாதம் 18ஆம் திகதி எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை சிவக்குமார் அடைந்தார். அங்கு, தேசிய மற்றும் இராணுவக் கொடியை சக வீரர்களுடன் ஏற்றினார்.

இதற்காக, இந்திய ஜனாதிபதி உள்ளிட்டவர்களின் பாராட்டுக்களை பெற்ற சிவகுமார் நேற்று அவரது சொந்த ஊருக்கு திரும்பினார்.

இதன் போது அவருக்கு குடும்பத்தினர் மற்றும் ஊர் மக்கள் ஆகியோர் இணைந்து உற்சாக வரவேற்பு அளித்ததுடன், பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.

இதேவேளை, மலேஷியாவில் வாழும் தமிழர், புதுச்சேரியில் வாழும் தமிழர் என, இருவர் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்துள்ள போதும், தமிழகத்தில் வசிக்கும் முதல் நபர் என்ற பெருமை, சிவகுமார் பெற்றுள்ளார்.

625.0.560.320.160.600.053.800.668.160.90 (25)

SHARE