எஸ். தியாகராசர் – சக்கரைத் தொழில் வளர்ச்சிக்கு காரணமானவர்.

332

கல்லூரியில் படித்து முதுக்கலைப் பட்டம் பெற்று நாட்டின் சக்கரைத் தொழில் வளர்ச்சிக்கு அரும் பாடுபட்டவர். வி. எஸ். தியாகராசா ஆவார். உயர்ந்த எண்ணங்கள் அவரது இரத்த ஓட்டம், சக்கரைத் தொழில் அவரது உயிர் மூச்சுக் காற்று.

5ஆண்டுத்திட்டங்ளின் அஎப்படைக் கொள்கை, கனரகத் தொழில்களைவளர்ப்பது, இறக்குமதியைக் குறைத்து ஏற்றுமதியை பெருக்குவது , வெளிநாட்டுச் செலாவாணியை விரிவுபடுத்துவதுமே ஆகும்.

அந்த முறையில் வி. எஸ். தியாகராசாவின் தொண்டுகள் போற்றுதற்குரியவை. மாபெரும் தொழிற்சாலை ஒன்றை தஞ்சைமாவட்டத்தில் நிறுவி , ஏராளமான அளவில் சக்கரை உற்பத்தி செய்து நாடு முழுவதும் விநியோகத்ததோடு, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய அவர் உதவியாக இருக்கிறார்.

எஸ். தியாகராசா , அரங்கநாத முதலியார் – முருகத்தாள் தம்பதியருக்கு மகனாக 1916ம் ஆண்டு நவம்பர் மாதம் 14ம் திகதி பிறந்தார்.

அவர் சென்னையில் பல்கலைக்கழகத்தில் படித்து எம்.ஏ பட்டம் பெற்றார். இளமைக் காலம் தொடக்கம் தெரில் துறையில் மிகுந்த ஆர்வத்தோடு இருந்தார். தன் காலத்தில் தொழில் ஒன்றை ஆரூரில் தோற்றுவிக்க வேண்டும் என்று கருதியிருந்தார்.

திருவாரூர் அருகில் உள்ள வடபாதி மங்கலம் என்பது ஒரு பெரிய பண்ணையாகும் அது வி. எஸ். தியாகராசாவுக்கு சொந்தமானது. ஆங்கு அவர் பெரிதும் முயன்று ஒரு மாபெரும் சக்கரை ஆலையை அரசாங்கத்தின் உதவியுடன் தோற்றுpத்தார்.

திருஆரூரன் சக்கரை ஆலையின் இயக்குனர் குழுவுக்குத் வி. எஸ். தியாகராசா தலைவாரானார். அவரது நிர்வாகத்தில் அந்த ஆலை நன்றாக வளர்ந்தது. அங்கு உற்பத்தியாகும் சக்கரைதான் தஞ்சை மாவட்டம் முழுவதும் விநியோகிக்கப்படுகிறது.

அமெரிக்கா, நம் நாட்டு சக்கரையை சமீப காலமாக எல்லையின்றி இறக்குமதி செய்து வருகிறது. மேலும் மத்திய கிழக்கு தூர கிழக்கு நாடுகளில் பல, நம் நாட்டு;ச் சக்கரையை விரும்பி வாங்குகின்றன. அங்கெல்லாம் நம் நாட்டுச் சர்க்கரையை விளம்பரப் படுத்தியர்களில்; வி. எஸ். தியாகராசாவும் முக்கிய நபரும் ஆவார்.

எஸ். தியாகராசாருக்கு கூட்டுறவு இயக்கத்தில் ஆர்வம் மிகுதி. அவர் பல கூட்டுறவுச் சங்கங்களை தொடங்குவதற்கு காரணமாக இருந்திருக்கிறார். சுக்கரைத் தொழில் தவிர வேறு சில தொழில்களிலும் அவர் தொடர்புடையவர். அவருக்கு வங்கித் தொழிலிலும் நல்ல அனுபவம் உண்டு.      சி சம்பந்தமாக அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப் பயணம் செய்தார். அதன் பலனாய் வாணிபத்தை நவீனமுறையில் வளர்த்தார்.

நாட்டில் தொழில் மறுமலர்ச்சி விரைந்து தோன்றி வரும் இந்த நேரத்தில் அதன் வேகத்தை ஒருபடி உயர்த்திய பெருமை வி. எஸ். தியாகராசாவுக்கு உரியதாகும். பிற நாட்டுக் சக்கரையை நாம் எதிர்பார்த்திருந்த நிலைமை மாறி, வெளிநாடுகளுக்குச் சக்கரையை ஏற்றுமதி செய்யும் அளவுக்குச் நாடு வளர்;ந்து இருக்கிறது என்றால். அதற்கும் வி. எஸ். தியாகராசாவின் பணியும் அர்ப்பணிப்பும் குறிப்பிடத்தக்கது.

எஸ். தியாகராசா 1982ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 18ஆம் திகதி காலமானார்.

SHARE