ஏன் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் என் பின்னாலேயே வருகின்றனர் – மகிந்த கேள்வி!

243

mahida-rajapaksa-67

தமிழீழ விடுதலை புலிகளின் ஆதரவாளர்கள் ஏன் இன்னும் என் பின்னாலேயே வந்து கொண்டு இருக்கின்றார்கள் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கேள்வி எழுப்பியுள்ளார்.

மலேசியாவில் இடம் பெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

பிக்கு ஒருவர் தாக்கப்பட்டமை தொடர்பிலும், தனக்கு எதிராக தமிழீழ விடுதலை புலிகளின் ஆதரவாளர்கள் ஆர்பாட்டம் முன்னெடுத்திருந்தமை தொடர்பிலும் மகிந்த இதன் போது தெரிவித்துள்ளார்.

மலேசியாவில் வசிக்கும் இலங்கையர்களை சந்தித்த மகிந்த, பின் ஊடகவியலாளர் சந்திப்பின் போது இந்த விடயங்கள் குறித்து தெரிவித்துள்ளார்.

”யுத்தத்தை நான் நிறைவு செய்யவில்லை,அப்போது ஏன் என் பின்னால் மாத்திரம் அனைவரும் வருகின்றனர்” என மகிந்த கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் இது தொடர்பில் கருத்து தெரிவித்த மகிந்த,

அண்மையில் யுத்தத்தை தான் நிறைவுக்கு கொண்டு வந்ததாகவும். ”75 வீத யுத்தத்தை நானே நிறைவு செய்தேன்” என்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்திருந்தார் என மகிந்த

குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், தமிழீழ விடுதலை புலிகளின் ஆதரவாளர்களின் அச்சுறுத்தல்கள் காரணமாக என்னுடைய அரசியல் செயற்பாடுகளுக்கு முடிவே கிடையாது என மகிந்த மேலும் தெரிவித்துள்ளார்.

SHARE