சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் பெரிய ஹிட் ஆன நிலையில், அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 171வது படத்தில் நடிக்க இருக்கிறார். அந்த படத்தின் முதற்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
மேலும் ரஜினி கேமியோ ரோலில் லால் சலாம் படத்தில் நடித்து இருக்கிறார். அவரது மகள் ஐஸ்வர்யா இயக்கி இருக்கும் அந்த படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக இருக்கிறது.
ஏர்போர்ட் வீடியோ
இந்நிலையியல் தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினி ஏர்போர்ட் வந்த வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி இருக்கிறது.
நாளை மும்பையில் நடைபெற் இருக்கும் இந்தியா vs நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை காண தான் ரஜினி செல்கிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது.