ஏறாவூர் இரட்டைக்கொலை! சூத்திரதாரியுடன் மேலும் இருவர் கைது! நகைகளும் மீட்பு

222

மட்டக்களப்பு, ஏறாவூர் பிரதேசத்தில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பில் மேலும் 2 பேரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தமக்குக் கிடைத்த தகவலை அடுத்து ஏறாவூர், வாவிக்கரையில் மறைந்திருந்த ஒருவரை நேற்று முன்தினம் திங்கட்கிழமை மாலை கைது செய்ததுடன், அவரிடமிருந்து கொலை இடம்பெற்ற வீட்டில் திருடப்பட்ட பென்ரனுடன் கூடிய தங்கச் சங்கிலியைக் கைப்பற்றியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், இச்சந்தேக நபரிடம் மேற்கொண்ட விசாரணையை அடுத்து திருகோணமலை, முள்ளிப்பொத்தானை 10ம் கொலனிக்கு ஒரு கிலோமீற்றர் தொலைவிலுள்ள காட்டுப்பகுதியில் அமைந்துள்ள பாழடைந்த வீடு ஒன்றிலிருந்து அன்றைய தினம் இரவு ஒருதொகை நகைகளை மீட்டதாகவும், அவை கொலை இடம்பெற்ற வீட்டில் திருடப்பட்டவை எனவும் பொலிஸார் கூறினர்.

இவ்வாறிருக்க, மற்றுமொருவரை ஏறாவூர் நகர மத்தியில் நேற்று செவ்வாய்க்கிழமை காலை கைது செய்ததுடன், இச்சந்தேக நபர் கொலை மற்றும் கொள்ளைச் சம்பவங்களின் சூத்திரதாரி என்று விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இக்கொலைச் சம்பவம் தொடர்பில் இதுவரையில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொலை செய்யப்பட்ட 32 வயதுடைய பெண்ணினது கணவரின் சகோதரனைக் கைது செய்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது, அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைப்பதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இவருக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட 3 சந்தேக நபர்களையும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.கணேசராஜா முன்னிலையில் திங்கட்கிழமை ஆஜர்படுத்திய போது, பொலிஸாரின் வேண்டுகோளுக்கு அமைய இச்சந்தேக நபர்களை மேலும் ஒரு நாள் தடுத்து வைத்து விசாரிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஏறாவூர் பிரதேசத்தில் முகாந்திரம் வீதியை அண்டியுள்ள வீடொன்றில் தாயாரான நூர்முஹம்மது ஹுஸைராவும் (வயது 56) அவரது திருமணமாகிய மகளான முஹம்மது யூசுப் ஜெஸீரா பாணுவும் (வயது 32) கொலை செய்யப்பட்ட நிலையில் அவர்களின் சடலங்கள் கடந்த 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டமை தெரிந்ததே.

625-0-560-320-160-600-053-800-668-160-90-9 625-0-560-320-160-600-053-800-668-160-90-10 625-0-560-320-160-600-053-800-668-160-90-11

 

 

SHARE