ஏறாவூர் இரட்டைக் கொலை மேலும் இரு சந்தேக நபர்கள் கைது

235

ஏறாவூர் இரட்டைக்கொலைக்கொலை சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின்பேரில் மேலும் இருவர் இன்று ஏறாவூர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதில் ஒருவர் கொலையின் சூத்திரதாரி என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

குறித்த கொலைச் சம்பவம் தொடர்பில் கொலைசெய்யப்பட்டவர்களின் நெருங்கிய குடும்ப உறவினர் ஒருவர் உட்பட நான்குபேர் ஏற்கனவே கைதுசெய்யப்பட்டு விசாரணைக்காகத் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் இவர்கள் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

ஏறாவூர்- முகாந்திரம் வீதி முதலாம் ஒழுங்கையிலுள்ள வீட்டில் வைத்து 56 வயதான என்எம்.சித்தி உசைரா மற்றும் அவரது மகளான 32 வயதுடைய ஜெனீரா பாணு மாஹிர் ஆகியோர் கடந்த 11 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பொல்லால் அடித்து கொடூரமாகக் கொலை செய்யப்பட்டனர்.

பணம், நகைகள் கொள்ளையிட வந்த நபர்களை கொலை செய்யப்பட்ட இருவரும் அடையாளம் கண்டு கொண்டமையினால் இந்த கொலை இடம்பெற்றதாக ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அத்துடன் கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் மோட்டார் சைக்கிள் மற்றும் இரத்தம் தோய்ந்த ஆடைகள், ஒருதொகை தங்க நகைகள், திருகோணமலை – முள்ளிப்பொத்தானை பகுதியிலிருந்து பொலிஸாரினால் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.polices

SHARE