மலை ஏறுவதில் மிகுந்த ஆர்வம் கொண்ட வீராங்கனை லாக்பா ஷெர்பா 8 முறை மலை ஏறி சாதனை படைத்துள்ளார்.
மலை ஏறுவதில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைக்க வேண்டும் என விரும்பி 2000ம் ஆண்டில் அதனை நிறைவேற்றினார்.
3 குழந்தைகளுக்கு தாயான இவரது வயது 44, தனது முதல் குழந்தை பிறந்த 8வது மாதத்தில் முதன் முதலாக மலை ஏறினார்.
அதன் பின்னர் அவரது மலை ஏறும் ஆர்வம் அதிகரித்தது, எனவே தொடர்ந்து எவரெஸ்ட் சிகரம் ஏறினார்.
2-வது முறை எவரெஸ்ட் சிகரம் ஏறும் போது அவர் 2 மாத கர்ப்பிணி ஆக இருந்தார், அதன் பிறகு 2-வது குழந்தை பிறந்தது.
சமீபத்தில் 8-வது தடவையாக எவரெஸ்ட் சிகரம் ஏறி புதிய சாதனை படைத்துள்ளார், இதன் மூலம் அவரது சாதனையை அவரே முறியடித்துள்ளார்.
