ஏலத்திற்கு வரும் பாரம்பரிய நகைகள்

344
லண்டனில் வசிக்கும் தமிழகத்தை சேர்ந்த அரச குடும்பத்திற்கு சொந்தமான நகைகள் ஏலம் விடப்படவுள்ளது.இந்தியாவின் தமிழகத்தை சேர்ந்த மன்னர் பரம்பரை ஒன்று தற்போது இங்கிலாந்தில் வசித்து வருகிறது.

இவர்கள் பரம்பரையாக பயன்படுத்தி வந்த நகைகளை ஏலம் விட முடிவு செய்துள்ளனர்.

நெக்லஸ், மாங்காய் மாலை, நவரத்தினங்கள்- வைரங்கள் பொறித்த ஒட்டியானம் உட்பட பழங்கால நகைகளை, பிரபல ஏல நிறுவனமான பான்ஹாம்ஸ் மூலம் ஏலம் விட தீர்மானித்துள்ளனர்.

இதுகுறித்து ஏல மையத்தின் இந்திய மற்றும் இஸ்லாமிய கலைப் பொருள் நிபுணர் ருக்மிணி குமாரி ரத்தோர் கூறுகையில், தங்கள் அடையாளத்தை வெளியிட விரும்பாத பிரிட்டனில் வசிக்கும் இந்திய அரச குடும்பத்தினர், தலைமுறை தலைமுறையாகப் பாதுகாத்து வந்த ஆபரணங்களை ஏலத்தில் விற்பனை செய்ய முன்வந்துள்ளனர்.

18 மற்றும் 19-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அரிய பொக்கிஷங்களான அவை, இந்த மாதம் 19-ஆம் திகதி ஏலத்தில் விடப்படும் என்று தெரிவித்துள்ளார்.

SHARE