ஏழைகளின் ஆப்பிள்… ரகசியத்தை தெரிஞ்சிக்கலாம் வாங்க!…

596

amla-farming

ஏழைக்கும் எளிதில் கிடைப்பது இந்த நெல்லிக்காய் ஒன்று தான்.. இந்த நெல்லிக்காயில் அதீக அளவுக்கு மருத்துவ பண்புகள் நிறைந்து காணப்படுகின்றன.

அதே போல் தேனிலும் அதீத அளவுக்கு மருத்துவ பண்புகள் காணப்படுகனிறன. இந்த இரண்டையும் ஒன்றாக கலந்து சாப்பிட்டால் நமக்கு கிடைக்கும் பயன்களுக்கு அளவே இல்லை. ஆம் தேனில் ஊற வைத்த‌ நெல்லிக்காயை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா?.

தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை தினமும் ஒன்று என சாப்பிட்டு வந்தால், இரத்தம் சுத்தமாவதோடு, இரத்தணுக்களின் அளவு அதிகரித்து, இரத்த சோகை நீங்கும்.

இதய தசைகள் வலிமையடைந்து, இதயநோய்கள் வருவது தடுக்கப்படும். கண்களில் ஏற்படும் எரிச் சல், கண்களில் இருந்து நீர் வடிதல், கண்கள் சிவப்பாகுதல் போன்றவை குணமாகும்.

பசியின்மையை போக்கி நல்ல‍ பசியைத் தூண்டும். சிலருக்கு அடிக்கடி பிடிக்கும் சளியை விரட்டுகிறது. தொண்டையில் புண்களை ஆற்றுவதோடு, உடலில் தேங்கிய சளி அனைத்தும் வெளியேற்றிவிடுகிறது.

இது மட்டுமா? அசிடிட்டியை போக்கி நல்ல நிவார ணத்தை தருகிறது. இதனை சாப்பிட்டு வந்தால் முகத்தின் பொலிவு அதிகரித்து, சருமத்திற்கு நல்ல அழகையும் ஆரோக்கியத்தையும் தருகிறது.

nellikka

SHARE