ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் சிவகார்த்திகேயன் கதாபாத்திரம் என்ன தெரியுமா?

101

 

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் பிஸியான ஹீரோவாக கலக்கி வருகிறார்.

கடைசியாக அவரது நடிப்பில் மாவீரம் திரைப்படம் வெளியாகி இருந்தது, படத்தின் விமர்சனம் மற்றும் கலெக்ஷன் எல்லாம் மாஸாக இருந்தது. தற்போது சிவகார்த்திகேயன் தனது 21வது படத்தின் படப்பிடிப்பில் படு பிஸியாக உள்ளார்.

அடுத்து சிவகார்த்திகேயன், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரு புதிய படம் நடிக்க இருக்கிறார். அண்மையில் முருகதாஸ் பிறந்தநாள் அன்று சிவகார்த்திகேயன் கூட்டணியில் ஒரு படம் தயாராக இருப்பதாக அறிவிப்பு வந்தது.

நடிகரின் கதாபாத்திரம்
சிவகார்த்திகேயன் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருக்கும் படத்தில் காவல் அதிகாரியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

படம் துப்பாக்கி படத்திற்கு இணையான அழுத்தமான கதைக்களத்துடன் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

SHARE