ஐஎஸ் தீவிரவாதிகளின் பிடியில் ஒசாமாவின் கோட்டை

174

அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவர் ஒசாமா பின்லேடனின் கோட்டையாக இருந்த தோரா போரா மலைப்பகுதியை ஐஎஸ் இயக்கம் கைப்பற்றியுள்ளது.

ஒசாமா பின்லேடன் தனது இறுதி காலத்தில் இந்த மலைப்பகுதியில் தான் பதுங்கியிருந்தார்.

ஒசாமா பின்லேடன் அமெரிக்கப் படையால் சுட்டுக் கொல்லப்பட்டது முதல் தோரா போராமலைப் பகுதியைக் கைப்பற்றுவதில் ஐஎஸ் இயக்கத்துக்கும், தலிபான்களுக்கும் இடையே மோதல் நிலவி வந்தது.

இந்நிலையில் தான் ஐஎஸ் தீவிரவாத இயக்கம் வெளியிட்டுள்ள ஓடியோ பதிவில், ஆப்கானிஸ்தானில் ஒசாமா பின்லேடன் பதுங்கி இருந்த ‘தோரா போரா’ மலைப்பகுதியில் ஐஎஸ் கொடி பறக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் ஆப்கானிஸ்தானிலுள்ள பல மாவட்டங்களைக் கைப்பற்றியுள்ளதாகவும், கிராமவாசிகளை அவர்களது இல்லத்திலேயே இருக்குமாறும் ஐஎஸ் இயக்கம் வலியுறுத்தியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

SHARE