ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகிய இணைந்து ஏற்படுத்தியுள்ள கூட்டாச்சி அமைச்சர்கள் இடையிலான மோதல்

335

 

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகிய இணைந்து ஏற்படுத்தியுள்ள கூட்டாச்சி அமைச்சர்கள் இடையிலான மோதல்கள் உக்கிரமடைந்து வருவதாக தெரியவருகிறது.

ranil 654s

அமைச்சர்களுக்கு உரிய துறைகள் சம்பந்தமான வர்த்தமானி அறிவித்தல் கடந்த மாதம் 21 ஆம் திகதி வெளியான பின்னரே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக பேசப்படுகிறது.

குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த குறிப்பிடத்தக்களவு அமைச்சர்கள் தமக்கு வழங்கப்பட்ட அமைச்சுக்கள் தொடர்பில் அதிருப்தியுடன் உள்ளனர்.

மேலும் அமைச்சர் பதவியை பெற்றுக்கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த மகிந்த அணியில் அங்கம் வகித்தவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அமைச்சர் மற்றும் பிரதியமைச்சர்கள் பதவிகள் குறித்து கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

மேலும் ராஜபக்ச அரசாங்கத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக இருந்த பசில் ராஜபக்ச தனது அமைச்சின் ஊடாக சகல அமைச்சுக்களிலும் தலையிட்டது போல், பெருநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தியமைச்சர் சம்பிக்க ரணவக்கவுக்கும் தனது அமைச்சின் ஊடாக ஏனைய அமைச்சுக்களில் தலையிட இடமளித்திருப்பது குறித்து அமைச்சர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது.

SHARE