ஐக்கிய நாடுகளின் அறிக்கையில் படையினர் மீதும் விடுதலைப்புலிகள் மீதும் கடும் குற்றச்சாட்டு

330

இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை வெளியிடவுள்ள அறிக்கையில் இலங்கை இராணுவத்தினர் மற்றும் விடுதலைப்புலிகள் மீது கடுமையான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. இந்த அறிக்கை, நாளை 14ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் மனித உரிமைகள் ஆணையாளரால் சமர்ப்பிக்கப்படவுள்ளது.  இதற்கு முன்னர் கடந்த வெள்ளிக்கிழமையன்று இந்த அறிக்கையின் பிரதி இலங்கை அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டது.  இரகசியமான இந்த அறிக்கையின் உள்ளடக்கம் வெளிவராத போதும் அதில் இராணுவத்தினரையும் விடுதலைப்புலிகளையும் கடுமையாக குற்றம் சுமத்தியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  போர்க்குற்றங்கள் தொடர்பில் எவர் (அரசியல்வாதிகள்) மீதும் நேரடியான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படவில்லை. எனினும் போர்க்குற்றகள் இடம்பெற்ற பிரதேசங்கள் குறிப்பாக கூறப்பட்டுள்ளன.  முன்னைய அரசாங்கம் வன்னியில் வாழ்ந்து வந்த 350,000 மக்களுக்கு உணவு மற்றும் மருந்துகளை அனுப்பாமல், திட்டமிட்ட வகையில், மறுப்பு வெளியிட்டு வந்ததாக அறிக்கையில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

SHARE