ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கு எதிராக இலங்கையில் வழக்குத் தொடர முடியாது – வெளிவிவகார அமைச்சு:-

298

ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கு எதிராக இலங்கையில் வழக்குத் தொடர முடியாது என வெளிவிவகார அமைச்சு கொழும்பு மாவட்ட நீதிமன்றில் அறிவித்துள்ளது.

இலங்கைக்கு எதிரான யுத்தக் குற்றச் செயல் தொடர்பில் குற்றம் சுமத்தி தாருஸ்மன் அறிக்கை மற்றும் அனைத்து விதமான விசாரணைகளும் பரிந்துரைகளும் சட்ட விரோதமானது என தீர்ப்பளிக்குமாறு கோரி கொழும்பு மாவட்ட நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்து.

தேசப்பற்றுடைய தேசிய இயக்கத்தின் தலைவர் பேராசிரியர் குணதாச அமரசேகரவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

ராஜதந்திர வரப்பிரசாதங்களின் அடிப்படையில் இலங்கையில் ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கு எதிராக வழக்குத் தொடர முடியாது என வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே இந்த வழக்கு விசாரணைகளை நடாத்த முடியாது என வெளிவிவகார அமைச்சு நீதிமன்றில் தெரிவித்துள்ளது.

எவ்வாறெனினும் இந்த வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என மனுதாரரின் சட்டத்தரணி கபில கமகே தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் அமைப்பு இலங்கை விவகாரத்தில் அதிகாரத்தை மீறிச் செயற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு விசாரணைகளை தொடர்ந்தும் முன்னெடுக்குமாறு கொரிக்கை விடுத்துள்ளார்.

இந்த மனு டிசம்பர் மாதம் 8ம் திகதி மீளவும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது

SHARE