ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் பான் கீ மூன் இலங்கை விஜயம் செய்துள்ள நிலையில் சிங்கள தேசியவாத அமைப்புக்கள் போராட்டம்

241

 

ஐ.நாவிற்கு எதிராக  சிங்கள தேசியவாத அமைப்புக்கள் போராட்டம்
ஐக்கிய நாடுகள் அமைப்பினை எதிர்த்து சிங்கள தேசியவாத அமைப்புக்கள் போராட்டம் நடத்தியுள்ளன. யுத்தம் இடம்பெற்ற  காலத்தில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் நடவடிக்கைகளை விமர்சனம் செய்து இந்தப் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் பான் கீ மூன் இலங்கை விஜயம் செய்துள்ள நிலையில் இந்தப் போராட்டம் நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
தமிழீழ விடுதலைப் புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதல்கள் தொடர்பிலான புகைப்படங்களை காண்பித்து போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் அமைப்ப தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சார்பாக செயற்பட்டதாக குற்றம் சுமத்தியுள்ளது. இந்தப் போராட்டத்தை பௌத்த பிக்குகள் தலைமையேற்று வழிநடத்தியுள்ளனர்.
மக்கள் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் குண்டுத் தாக்குதல் நடத்தி கூட்டுப்படுகொலை செய்த போது எவரும் அதனை கேட்கவில்லை என தெரிவித்துள்ளனர்.
போராட்டக்காரர்கள் ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கைக் கிளை அலுவலகத்தை விட்டு வெளியேறிய சில நிமிடங்களில் பான் கீ மூன் காரியாலயத்தை சென்றடைந்தார் என தெரிவிக்கப்படுகிறது.

SHARE