ஐசிசி பட்டியல். மீண்டும் முதலிடம்! புகழின் உச்சியில் அஸ்வின்

147

625-500-560-350-160-300-053-800-748-160-70-12

இந்திய நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சாளர் தரவரிசை பட்டியலில் மீண்டும் முதலிடத்தை கைப்பற்றி அசத்தியுள்ளார்.

நியூசிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன் ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சாளர் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்த அஸ்வின் தற்போது, 900 புள்ளிகளுடன் முதல் இடத்தை திரும்பக் கைப்பற்றியுள்ளார்.

உலக டெஸ்ட் கிரிகெட் வீரர்களுள் 900 புள்ளிகளை பெற்ற ஆறாவது பந்து வீச்சாளர் என்ற சாதனையை அஸ்வின் படைத்துள்ளார். மேலும் 900 புள்ளிகளை பெற்ற முதல் இந்தியர் என்ற சாதனையும் இதன் மூலம் ஆஸ்வின் நிகழ்த்தியுள்ளார்.

இந்தியாவில் இதுவரை எந்த வீரரும் 900 புள்ளிகள் பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா, நியூசிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக பந்து வீசிய அஸ்வின் 13 விக்கெட்டுகளை கைப்பற்றி இந்தியாவின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.

நியூசிலாந்திற்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டி தொடரில் அஸ்வின் மொத்தம் 27 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

மேலும், 39 டெஸ்ட் போட்டிகளில் மிக விரைவில் 220 விக்கெட்களை கைப்பற்றிய வீரர் என்ற பெருமையையும் அஸ்வின் அடைந்துள்ளார்.

SHARE