உலகம் முழுக்க பெரும் சாதனை செய்த படம் பாகுபலி. இதன் இரண்டு பாகங்களும் மக்களிடத்தில் மிகுந்த வரவேற்பை பெற்று முக்கியமானதாக திகழ்ந்தது. ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படத்தில் அனுஷ்கா, பிரபாஸ், ராணா என பலர் நடித்திருந்தார்கள்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மும்மொழிகளில் வந்த இப்படத்தில் மனோகரி என்ற ஐட்டம் பாடல் இருந்தது. இப்பாடலை பாடியவர் ரேவந்த். Indian Idol Season 9 ன் டைட்டில் வின்னர் இவர் தான்.
இவருக்கு நிறைய ரசிகர்கள் உள்ளனர். இதில் மோசடி பேர்வழிகள் சிலர் Fans Page என்ற பெயரில் ரேவந்தின் ரசிகர்களை குறிக்கோளாக வைத்து பணமோசடியில் ஈடுப்பட்டுள்ளனர்.
இதையறிந்த ரேவந்த் உடனே சைபர் கிரைம் போலிஸில் புகார் அளித்துள்ளனர். மோசடி கும்பலை தற்போது போலிஸ் வலை வீசி தேடி வருகிறதாம்.