ஐக்கிய தேசியகட்சியின் இறுதிபொதுத்தேர்தல் பிரச்சார கூட்டத்தில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்துடன் அவன்ட் கார்டே நிறுவனத்தின் உறுப்பினர்கள் சிலரிற்கு தொடர்புள்ளதாக அமைச்சர் ராஜித சேனரத்தின தெரிவித்துள்ளார்.
புளத்சிங்களவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார், அவர் மேலும் குறிப்பிட்டள்ளதாவது.
ஐக்கிய தேசியகட்சியின் இறுதிபொதுத்தேர்தல் பிரச்சார கூட்டத்தில் இடம்பெற்ற துப்பாக்கிபிரயோகத்துடன் அவன்ட் கார்டே நிறுவனத்தின் உறுப்பினர்கள் சிலரிற்கு தொடர்புள்ளது,எனினும் இந்த துப்பாக்கி சூட்டு காயத்திற்குள்ளான ஐக்கியதேசிய கட்சி ஆதரவாளர்கள் குறித்து ஐக்கியதேசிய கட்சியின் அமைச்சர்கள் தற்போது எதனையும் தெரிவிப்பதில்லை.
அவன்ட் கார்டே நிறுவனத்திற்கு சார்பாக கருத்து தெரிவித்தவர்கள் பெருமளவு பணத்தை அன்பளிப்பாக பெற்றுள்ளனர், தன்னை யுத்தவீரன் என தெரிவித்துக்கொள்ளும் ஓருவர் அவன்ட்கார்டே நிறுவனத்தை மூடினால் 5000 யுத்தவீரர்கள் வேலைவாய்ப்பை இழப்பார்கள் என தெரிவித்துள்ளார்.
அவன்ட்கார்டே சொந்தமான யுத்தவீரர் ஓருவர் வெளிநாட்டில் மரணித்தவேளை கப்பல் முகவர்நிறுவனங்கள் அவரின் குடும்பத்திற்கு 35 மில்லியனை வழங்கின, ஆனால் அந்தஅவன்ட்கார்Nடு முகாமையாளர் தான் அதில் 29 மில்லியனை எடுத்துக்கொண்டு பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு 6 மில்லியன்களை மாத்திரம் வழங்கினார்.
அவன்ட்கார்டே சார்பில் வெளிநாடுகளில் பணிபுரியும் யுத்தவீரர்களிற்கு சர்வதேச முகவர்கள் 3000 அமெரிக்க டொலர்களை வழங்கினர்,ஆனால் குறிப்பிட்ட நிறுவனத்தின் நிர்வாகம் 950 டொலர்களையே வழங்கியுள்ளது, என அமைச்சர் தெரிவித்துள்ளார்.