இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக கலக்கிக் கொண்டிருப்பவர் ஏ.ஆர்.ரகுமான்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஹாலிவுட் படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். சமீபத்தில் சென்னையில் இவர் நடத்திய இசை நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் மற்றும் போக்குவரத்து நெரிசலால் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன.இதனால் ஏ.ஆர்.ரகுமானுக்கு ஏகப்பட்ட பிரச்சனைகள் வந்தன.
வைரல் போட்டோ
இந்நிலையில், ஸ்விட்சர்லாந், ஜெனிவாவில் உள்ள ஐ.நா. சபையின் தலைமையகத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் சென்றுள்ளார்.
அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாக வைரலாகி வருகிறது, ஆனால் எதற்காக அவர் அங்கு சென்றுள்ளார் என்பது தெரியவில்லை.