ஐ பி எல் போட்டியின் இறுதி ஆட்டத்தில் வாட்சன் அரைசதம் கடந்து அசத்தினார்

159

ஐபிஎல் போட்டியின் நேற்றைய இறுதி ஆட்டத்தில், தனி ஒருவனாக பேட்டிங்கில் மிரட்டி வாட்சன் அரைசதம் கடந்து அசத்தினார்.

இவரது கலக்கல் ஆட்டம் கைகொடுக்க சென்னை அணி ஐதராபாத்தை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

சென்னை அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய வாட்சன் நாலாபக்கமும் பந்துகளை சிதறவிட்டு தனது மெர்சல் ஆட்டத்தால் ரசிகர்களை மயக்கினார்.

சந்தீப் வீசிய 6வது ஓவரில் தொடர்ச்சியாக ஒரு சிக்சர் ஒரு பவுண்டரி அடித்தார். ஆபாரமாக ஆடிய வாட்சன் 51 பந்தில் சதமடித்தார்.

சென்னை அணி 18.3 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 181 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.வாட்சன் (117) எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மேலும் ஆட்டநாயகன் விருதையும் தட்டி சென்றார்.

அவுஸ்திரேலிய வீரர் ஷேன் வாட்ஸனுக்கு , ஷேன் ஷாக்கிங் வாட்ஸன் என தோனி சூட்டியுள்ளதை வாட்ஸனும் வரவேற்றுள்ளார்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பயிற்சியாளருமான விரேந்திர சேவாக், தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி வாட்சன், நின்னு அடிச்சீங்க. உலகிலேயே மிகபிரமாண்டமான டி20 போட்டியான ஐபிஎல் கிரிக்கெட்டின் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வாழ்த்துகள்.

இந்தப் போட்டித் தொடரில் தொடக்கத்தில் இருந்தே சிஎஸ்கே தனது ஆதிக்கத்தை செலுத்தியது. இந்த வெற்றி ல் ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் பெருமையானது என பாராட்டியுள்ளார் .

 

SHARE