ஐயயோ எங்களை காப்பாற்றுங்கள்’

295

 

ஐயயோ எங்களை காப்பாற்றுங்கள்’

முண்சரிவு அணர்த்தம் அறிவித்து 05 வருடங்கள் ஆன போதும் யாரும் கண்டு கொள்ளாத வேவண்டன்

தோட்ட 58 குடுபத்தினர்

3e5c0676-d756-4063-a3ec-3ba2b270e87d 7a8ee61a-d936-411a-bac6-5e39118bd64e 92ad54f5-0500-459b-949b-657474ef26c8 109b0abc-04e4-47c9-84ac-56802b20e31e bf35e553-8c99-4090-b0af-322e52f159e6 ca227ab2-7d50-491d-9035-f138b6941d7e

நுவரெலியா மாவட்டம் கொத்மலை பிரதேசத்திற்குட்பட்ட தவலந்தன்ன வேவண்டன் தோட்டத்தில் பாரிய கற்பாறை உடைந்து மண்சரிவு

அபாயம் நேர்ந்துள்ளது. இந்த மண்சரிவு 2014 ஆரம்பமானது. பகுதி பகுதியாக ஏற்பட்டு வரும் மண்சரிவினால்

அக்காலப்பகுதியில் பாதிப்புக்குள்ளான 58 குடும்பங்களை சேர்ந்த மக்கள் இடம் பெயர்ந்து வௌண்டன் தமிழ்

வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின் இவர்கள் தற்காலிகமாக குடியிருப்புகளுக்கு மாற்றப்பட்டு ஒரு வருட காலமாக

தங்கி இருந்தனர். இக்காலப்பகுதியில் இவர்களுக்கான வீடுகளை அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதும் அவை

முறையாக நடைபெறவில்லை. இதனால் இந்த மக்கள் தற்காலிக கூடாரங்களை கைவிட்டு விட்டு பாதிப்புக்குள்ளான வீடுகளுக்கு

திரும்பினர். அக்காலப்பகுதியில் வீடுகள் கட்டுவதற்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு வீட்டுக்கான தளமும் வெட்டப்பட்டது.

குறிப்பிட்டவர்களுக்கு தகரம்ரூபவ் சீட் வகைகளும் வழங்கப்பட்டன. குறித்த காலப்பகுதியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால்

தொடர்ந்து இந்த வேலைத்திட்டம் கைவிடப்பட்டது. இதனால் மேற்படி மக்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளதுடன் மலையகத்தில்

எற்பட்டிருக்கும் சீரற்ற காலநிலையால் நாளாந்தம் மண்சரிவு ஏற்பட்டு வருகின்றது. மேற்படி மக்களுக்கு வீடுகளை அமைத்து

அவர்களை பாதுகாப்பதற்கு புதிய அரசாங்கம் எந்த ஒரு வேலைத்திட்டத்தையும் முன்னெடுக்காமை வருத்தத்திற்கு உரியதே.

இந்நிலைமை தொடர்பாக பாதிப்புக்குள்ளான தோட்ட மக்களிடம் வினவிய போதுரூபவ் ஐயயோ அய்யா எங்களை காப்பாற்றுங்கள்.

நாங்கள் இரவு வேளைகளில் கல் வரும் என்ற அச்சத்தில் நித்திரை இன்றி வாழ்ந்து வருகின்றோம். கைக்குழந்தைகள்ரூபவ்

சிறுவர்கள்ரூபவ் வயது முதிர்ந்தோர் உட்பட நாங்கள் அனைவரும் பயத்துடன் கல் வந்து விடுமோ என்ற அச்சத்திலேயே வாழ்ந்து

வருகின்றோம். தற்போதும் நாளாந்தம் கற்கள் வந்த வண்ணமே உள்ளன. இப்போது எவரும் எங்களை பார்க்க வருவதில்லை.

வருடங்கள் 3 கடந்த போதும் இதுவரைக்கும் எங்களுக்கு எந்த விதமான நிவாரணமும் கிடைக்க வில்லை. பலர் வந்தனர் அதை

செய்கின்றோம் இதை செய்கின்றோம் என்று என்னென்னவோ கூறிய போதும் ஒன்றுமே நடைமுறையில் இல்லை.

குறிப்பிட்ட 3 வருட காலப்பகுதிக்குள் நாங்கள் 4 முறை மண்சரிவு அபாயம் ஏற்பட்டு பாடசாலைக்கும்ரூபவ் தற்காலிக

குடியிருப்புக்கும் மீண்டும் வீடடுக்குமாக மாறி மாறி வாழ்ந்து வருகின்றோம். தற்பொழுது மலையகத்தில் பல்வேறு

விதமான வீட்டுத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதில் ஒன்றையாவது எமக்கு பெற்றுக் கொடுக்க நடவடிக்கைகளை

மேற்கொள்ள வேண்டும். என்று கூறினர்.

SHARE