ஐரோப்பாவில் ஸ்ட்ரோவுக்கு வருகிறது தடை

209

.
பிளாஸ்டிக் பொருட்கள் மீதான அடுத்த கட்ட தாக்குதலுக்கு தயாராகிறது, ஐரோப்பிய யூனியன். ஏற்கனவே, 2015ல் பிளாஸ்டிக் பைகளை தயாரிக்கவும், பயன்படுத்தவும் விதித்த தடை, ஐரோப்பிய மக்களால் வரவேற்கப்பட்டது.

இதனால் கிடைத்த பலன்களை அடுத்து, கடற்கரைகள் மற்றும் இதர நீர் நிலைகளுக்கு அருகே குவியும் 10 பிளாஸ்டிக் பொருட்களை பட்டியலிட்டு, அவற்றை தடை செய்யும் திட்ட வரைவை உறுப்பினர் நாடுகளுக்கு அனுப்பியுள்ளது, ஐரோப்பிய யூனியன்.

குளிர் பானங்களை உறிஞ்ச உதவும் ஸ்ட்ரா, உணவுத் தட்டுகள், பிளாஸ்டிக் மீன் பிடி கருவிகள் உள்ளிட்ட ஒருமுறை பயன்படுத்தி துாக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு இந்தத் தடை பொருந்தும்.

உறுப்பினர் நாடுகள் விரைவில் இதற்கு ஒப்புதல் வழங்கியதும், அடுத்த சில மாதங்களில் ஒருமுறை பயன்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை அமலுக்கு வந்துவிடும். பிளாஸ்டிக் பொருட்களால் கடல் வாழ் உயிரினங்களின் உணவுச் சுழற்சி பாதிக்கப்படுவதோடு, பிளாஸ்டிக் பொருட்களை தயாரிப்பதாலும் சுற்றுச் சூழல் வெகுவாக பாதிக்கிறது.

SHARE