ஐரோப்பாவுக்கான தூதுவர்கள் நியமனம்! கடும் அழுத்தம் கொடுக்கும் பிரபல பெண்மணி!

564

கடந்த காலங்களில் அமைதியாக இருந்த இலங்கையின் முன்னாள் பலமான பெண் கதாபாத்திரம் மீண்டும் முன்வரிசை வேலைகளை ஆரம்பித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

அவர் இந்த நாட்களில் வெளிநாட்டு தூதுவர்களை நியமிக்கும் நடவடிக்கைகளில் மிகவும் ஆர்வமாக ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பல காலங்களாக இலங்கைக்கான ஐரோப்பா நாடுகளில் முக்கிய நாடு ஒன்றில் தூதுவர் பதவியில் வெற்றிடம் நிலவியது. அந்த வெற்றிடத்திற்காக புதிய அதிகாரி ஒருவரை நியமிப்பதற்கு அரசாங்கம் கடந்த நாட்களில் தீர்மானம் மேற்கொண்டது.

எப்படியிருப்பினும் இந்த முன்னாள் பலமான பெண்மனி இது தொடர்பில் சில தாமதங்களின் பின்னரே தகவல் அறிந்து கொண்டுள்ளார்.

அதனை அறிந்து கொண்டதன் பின்னர் அவர் வெளியுறவு நடவடிக்கையின் பிரதான அதிகாரியை தொடர்பு கொண்டு, தனது அனுமதியின்றி இவ்வாறான நியமிப்புகள் மேற்கொள்வதற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.

தனது அனுமதியின்றி இவ்வாறான நியமிப்புகள் இடம்பெற கூடாதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் இது அரசாங்கத்தின் உயர் மட்டத்தில் இருந்து கிடைக்கப்பெற்ற உத்தரவென குறித்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

மேலும் தனது அனுமதியின்றி ஐரோப்பாவுக்கு ஒருவரையும் நியமிக்க முடியாதென குறித்த பெண்மணி தெரிவித்துள்ளார்.

எப்படியிருப்பினும் இந்த சம்பவம் தொடர்பில் கோபமடைந்த வெளியுறவு நடவடிக்கை அதிகாரி, இந்த பதவிக்கு தீர்மானிக்கப்பட்ட பெயர்களை குறித்த முன்னாள் பெண்மனிக்கு வழங்காமல் இருக்க தீர்மானித்துள்ளார்.

இதன் காரணமாக பல காலங்களாக வெற்றிடமாக காணப்பட்ட குறித்த பதவி இன்றும் வெற்றிடமாகவே காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அண்மைக்காலமாக சமகால அரசாங்கத்தின் செயற்பாடுகளின் பின்னணியில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரத்துங்க செயற்படுவதாக தகவல்கள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

SHARE