ஐரோப்பிய நாடுகளுக்கு பாரிய ஆபத்து – அமெரிக்கா அவசர எச்சரிகை…!

261

download-1

ஐரோப்பிய நடுகளில் தீவிரவாதத் தாக்குதல்கள் மேற்கொள்வதற்கான பாரிய ஆபத்து காணப்படுவதாக அமெரிக்கா எச்சரி்கை விடுத்துள்ளது.

அமெரிக்க வெளியுறவுத் துறை இந்த எச்சரிகையினை விடுத்துள்ளது. நத்தார் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டவுள்ளன.

இஸ்லாமிய அரசு என்று தங்களை அடையாளப்படுத்திக்கொண்டுள்ள ஐ.எஸ் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு மற்றும் அதன் இணை அமைப்புகள் இவ்வாறு தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் தங்களுக்கு நம்பகமான தகவல்கள் கிடைத்திருப்பதாக அமெரிக்க மக்களிடம் அந்நாட்டு வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.

இதேவேளை, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், பிரான்சில் இரண்டு தனித்தனி தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டது. இந்த தாக்குதலில் பொது மக்கள் பலர் பாதிக்கப்பட்டனர்.

மேலும், கடந்த வார இறுதியில்,பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக தெரிவித்து சந்தேகத்தின் பேரில் ஏழு பேரை பிரான்ஸ் நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

SHARE