ஐஸ்வர்யா ராயிடம் ரூ 100 சம்பள பாக்கியை சொல்லி காட்டிய ரஜினி, விழுந்த விழுந்து சிரித்த படக்குழு

120

 

ரஜினி என்ற ஒரு சொல் மந்திரமாக சுமார் 45 வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவில் சுழன்று வருகின்றது. என்ன தான் ரஜினி சாதனையை அவர் உடைத்தார், இவர் உடைத்தார் என்று கூறி வந்தாலும், இன்று வரை ரஜினி தான் நம்பர் 1 இடத்தில் சிம்மாசனம் போட்டு அமர்ந்துள்ளார்.

அதற்கு சமீபத்தில் வந்த ஜெயிலர் படமே ஒரு சாட்சி, இந்த நிலையில் ரஜினி நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகிய படம் எந்திரன்.

ரூ 100 சம்பள பாக்கி
இப்படத்தில் பாரதிராஜா மகன் மற்றும் நடிகர் மனோஜ் உதவி இயக்குனராக பணியாற்றினார், அப்போது ஒரு நாள் படப்பிடிப்பில் ஐஸ்வர்யா ராயிடம் மனோஜை அறிமுகப்படுத்தியுள்ளார்.

இவர் தான் பாரதிராஜா அவர்களின் மகன் என்று சொல்ல, ஐஸ்வரயா ராயும் அவரை வெல்கம் செய்துள்ளார்.

பிறகு சில மணி நேரம் கழித்து இவருடைய அப்பா எனக்கு 16 வயதினிலே நடிக்கும் போது சம்பள பாக்கி ரூ 100 கொடுக்க வேண்டும், அதை இன்று வரை கொடுக்கவில்லை என சொல்ல, அங்கிருந்தவர்கள் மற்றும் ஐஸ்வர்யா ராய் விழுந்து விழுந்து சிரித்துள்ளனர்.

SHARE