ஐஸ்வர்யா ராய்க்கு கணவரிடம் பிடிக்காதது..

511

இந்திய திரை உலகமே வியக்கும் விதத்தில் எடுத்துக்காட்டான தம்பதிகளாக வாழ்ந்து வருகிறார்கள், அபிஷேக் பச்சன்– ஐஸ்வர்யா ராய் ஜோடியினர். தங்களின் வெற்றிகரமான மண வாழ்க்கையின் பத்தாவது ஆண்டை இந்த நட்சத்திர தம்பதி நெருங்கும் நிலையில், இவர்களுக்கு இடையே பரஸ்பர புரிதல் எந்த அளவு இருக்கிறது என்று அறிய ஒரு ‘கேள்வி’ சோதனை.

ஐஸ்வர்யா-ராய்-அபிஷேக்-பச்சன்-மோதல்..

ஒரே கேள்வியை இருவரிடமும் தனித்தனியே கேட்டபோது…

எந்த மாதிரியான ஆடைகளை அணிய உங்கள் துணை விரும்புவார்?

அபிஷேக்: இந்திய ஆடைகள், டிராக்சூட் அல்லது அந்தந்தச் சூழலுக்குப் பொருத்தமான ஆடைகளை அணிய ஐஸ்வர்யா விரும்புவாள்.

ஐஸ்வர்யா: சரிதான். இந்திய ஆடைகள் எனக்குப் பிடிக்கும். ஆனால் அது பெரும்பாலும் கறுப்பு நிறமாக இருக்க வேண்டும். குழந்தையுடன் பயணம் செய்யும்போது அதுதான் பாதுகாப்பாகவும் வசதியாகவும் இருக்கும்.

ஆடை விஷயத்தில் அபிஷேக் எப்படி என்று இதே கேள்வியை ஐஸ்வர்யாவிடம் கேட்டபோது…

ஐஸ்வர்யா: ‘பதானி’ வகை ஆடைகளை அணிய அபிஷேக் விரும்புவார்.

அபிஷேக்: ஐஸ் சொல்வது சரி. பதானி அல்லது ‘டிராக்சூட்கள்’தான் எனது விருப்பம்.

உங்கள் துணை ருசித்துச் சாப்பிடும் உணவு எது?

அபிஷேக்: எந்த துரித உணவும் ஐஸுக்கு பிடிக்கும். எனக்கும் அதுதான் பிடிக்கும்.

ஐஸ்வர்யா: எப்போதும் ஏதாவது கொறிப்பது எங்கள் இருவருக்கும் பிடிக்கும். எனவே நாங்கள் எப்போதும் சாக்லேட், நொறுக்குத் தீனிகள் என்று எதையாவது மென்றுகொண்டிருப்போம்.

அபிஷேக் விரும்பும் பானம்?

ஐஸ்வர்யா: காபி. அதுதான் அவருக்குப் பிடித்த பானம்.

அபிஷேக்: காபியால்தான் நான் இயங்கிக்கொண்டிருக்கிறேன். அது ஐஸுக்கு நன்கு தெரியும்.

உங்கள் துணை எந்தப் படத்தில் சிறப்பாக நடித்திருப்பதாக நினைக்கிறீர்கள்?

அபிஷேக்: ‘ஹம் தில் தே சுக்கே சனம்’, ‘குரு’, ‘ஜோதா அக்பர்’, ‘சரப்ஜித்’ ஆகிய படங்களில் ஐஸ் நன்றாக நடித்திருப்பாள்.

ஐஸ்வர்யா: ‘ஹம் தில் தே சுக்கே சனம்’, ‘சோக்கர் பாலி’, ‘ரெய்ன்கோட்’, ‘ஜோதா அக்பர்’, ‘தேவதாஸ்’, ‘சரப்ஜித்’.

அபிஷேக் நடித்த படங்களில் சிறப்பானவை…?

ஐஸ்வர்யா: ‘குரு’, ‘யுவா’, ‘சர்க்கார்’, ‘பிளப்மாஸ்டர்’ போன்றவை. முதல் படமான ‘ரெப்யூஜி’யில் கூட அபிஷேக் நன்றாக நடித்திருப்பார்.

அபிஷேக்: நான் நடித்த எந்தப் படமும் எனக்குப் பிடிக்காது.

உங்கள் துணையின் நினைவில் நிற்கும் மறக்க முடியாத தருணம் எது?

அபிஷேக்: நியூயார்க்கில் நான் அவரிடம் எனது காதலைத் தெரிவித்த தருணமாக இருக்கலாம். என்னுடைய நினைவில் நீங்காத தருணமும் அதுதான்.

ஐஸ்வர்யா: அவர் என்னிடம் தனது காதலைத் தெரிவித்த நியூயார்க், நாங்கள் தேனிலவுக்குச் சென்ற போரா போரா! அப்புறம், நாங்கள் எங்கள் மகள் ஆரத்யாவுடன் முதன்முதலில் பயணம் மேற்கொண்ட மாலத்தீவுகள், லண்டன், கோவா ஆகிய இடங்கள் எல்லாம் நினைவில் நிற்கின்றன.

உங்கள் துணைக்கு, உங்களிடம் பிடிக்காத விஷயம்?

அபிஷேக்: பயணம் செய்யும்போது ஒவ்வொன்றையும் இப்படித்தான் ‘பேக்’ செய்ய வேண்டும் என்பதில் அவள் கறாராக இருப்பாள். அப்படி ‘பேக்’ செய்வது அவளுக்குப் பிடிக்குமா, பிடிக்காதா என்று எனக்குத் தெரியாது. ஆனால் அவ்வாறு ‘பேக்’ செய்வதைப் பார்ப்பதே எனக்குப் பிடிக்காது.

ஐஸ்வர்யா: நான் பார்த்துப் பார்த்து ‘பேக்’ செய்வது அவருக்குப் பிடிக்காது. முறையாக ‘பேக்’ பண்ணுவது எவ்வளவு கஷ்டமான விஷயம் என்று அவருக்குத் தெரியாது. ஆனால் நான் அதில் ரொம்ப கவனமாக இருப்பேன். அவசர அவசரமாகக் கிளம்புகிறோம் என்றாலும் ஒழுங்காக பேக் செய்யவேண்டும். பேக் செய்வதற்காக ஒரு நாள் இரவு முழுக்கக் கண் விழிக்க நேர்ந்தாலும் எனக்குக் கவலையில்லை.

உங்கள் துணை எப்படி நினைவுகூரப்பட வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

அபிஷேக்: ஒரு நல்ல மகளாக, மனைவியாக, தாயாக அவள் கருதப்பட வேண்டும். நான் ஒரு நல்ல மனிதனாக கருதப்பட வேண்டும்.

ஐஸ்வர்யா: அவர், பிறரால் தான் ஒரு நல்ல மனிதராக நினைக்கப்பட வேண்டும் என்று விரும்புவார். நான் ஒரு நல்ல மனுஷியாக கருதப்பட வேண்டும் என்று நினைக்கவில்லை, நிஜத்திலேயே நல்ல மனுஷியாகத்தான் இருக்க விரும்புகிறேன்.

திருமணத்தால் நடந்த மிக நல்ல விஷயம்?

அபிஷேக்: நான் எனது சிறந்த தோழியுடன் இணைந்து வாழும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன். நான் அவளிடம் எந்த விஷயம் பற்றியும் பேசலாம்.ias

SHARE