கடந்த 1994 -ம் ஆண்டு உலக அழகி பட்டத்தை வாங்கி உலகம் முழுவதும் கவனத்தை தன் பக்கம் திரும்ப வைத்தவர் நடிகை ஐஸ்வர்யா ராய்.
இதனை அடுத்து இவர் தமிழ், ஹிந்தி மொழி படங்களில் நடித்து பிரபல நடிகையாக மாறினார். ஐஸ்வர்யா ராய், நடிகர் அபிஷேக் பச்சனை 2007 -ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.
சர்ச்சை
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அப்துல் ரசாக், அழகான, அறிவான குழந்தை வேண்டுமென்றால் ஐஸ்வர்யாராயை திருமணம் செய்து கொண்டால் கிடைத்துவிடாது என்று கூறியுள்ளார்.
இவரின் இந்த பேச்சுக்கு பலரும் எதிர்பார்த்து தெரிவித்துனர். இந்நிலையில் ஐஸ்வர்யா ராய்யை கொச்சைப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் நான் அப்படி பேசவில்லை என்று தற்போது அப்துல் ரசாக் விளக்கம் அளித்துள்ளார்.