ஐஸ்வர்யா ராய் அழகின் ரகசியம் தெரியுமா?… ரகசியத்தை போட்டு உடைத்த அழகி!…

305

aishwarya_rai_robot1

உலக அழகி பட்டத்தை வென்ற அழகு புயல் ஐஸ்வர்யா ராய் திருமணம் ஆகி குழந்தை பிறந்துவிட்டாலும், இப்போதும் அதே அழகுடன் வலம் வருகிறார். அழகிய பெண்களை ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் ரசிப்பார்கள் என்பதற்கு உதாரணம் இந்த அழகு பொம்மைதான்.

குறிப்பாக, நீலம் கலந்த பழுப்பு நிற பச்சை கருவிழிகள் தான் அனைவரையும் சுண்டி இழுக்கும். லண்டனில் உள்ள மேடம் டுஸாட்ஸ் மெழுகு மியூஸியத்தில் இடம் பிடித்த முதல் இந்தியப் பெண் மெழுகுச் சிலை, அழகுச் சிலை ஐஸ்வர்யாவினுடையதுதான்!

மாடலிங் நாட்களில் இருந்தே ஐஸ்க்ரீம் தவிர்ப்பவர். நாள் ஒன்றுக்கு எட்டு டம்ளர் தண்ணீர், கொஞ்சம் உடற்பயிற்சி, காய்கறி மற்றும் பழங்கள்தான் ஐஸின் ஃபிட்னெஸ் ரகசியம்.

ஆயுர்வேதப் பொருட்களை மட்டுமே உபயோகிப்பார். வீட்டு சமையல் பொருட்களையே மேனி பராமரிப்புக்கும் பயன்படுத்துவார். இரவு உறங்கச் செல்லும் முன் மேக்கப் கலைக்க ஐஸ் பயன்படுத்தும் மாய்சரைஸர் சுத்தமான பசும் பால் ஆகும்.

யோகாசனம் மற்றும் உடற்பயிற்சி மூலம் உடலை கட்டுக்கோப்பாக பராமரித்துக்கொள்கிறார். உணவுக்கட்டுப்பாட்டைவிட, எதை உண்ணவேண்டுமோ அதை அளவோடு உண்கிறேன் என கூறுகிறார்.

மசாலா மற்றும் எண்ணெய் நிறைந்த உணவுகளை குறைத்துவிட்டு வேகவைத்த காய்கறிகள், பழங்கள், சாலட்கள் போன்றவற்றை அதிகமாக உட்கொள்கின்றேன். ஆரோக்கியமான உணவு பொருட்களை தேர்ந்தெடுத்து உண்ணும் போதுதான் உணவு கட்டுபாடு என்பது முழுமை அடைகிறது என்று தனது அழகின் ரகசியம் பற்றி மனம் திறக்கிறார் இந்த பதுமை.

ஐஸ்வர்யா ராய் எங்கு சென்றாலும் அவரிடம் பத்திரிகையாளர்கள் கேட்கும் கேள்விகளில் ஒன்றுதான் உங்கள் அழகின் ரகசியம் என்ன? இதற்கு அவர் அளித்துள்ள பதில், “எனது அழகு ரகசியம் என்பது பழைய வாழ்க்கையை திரும்பி பார்க்காமல் இருப்பதுதான். என் வாழ்க்கையில் நிறைய விஷயங்கள் நடந்திருக்கின்றன.

இப்போது அவற்றில் இருந்து விடுபட்டு புது வேலையை துவங்கி இருக்கிறேன். நான் இப்போது திருமணம் ஆனவள். என் குடும்பத்தின் கௌரவத்தையும் மரபையும் கட்டிக்காக்கும் பொறுப்பு எனக்கு இருக்கிறது. அதிலிருந்து எப்போதும் நழுவ மாட்டேன். யாருக்கும் காதல் இருக்கலாம்.

கல்லூரி வாழ்க்கையில் காதலிப்பது சகஜமானது. ஆனால் அதில் இருந்து வெளியே வந்த பிறகு திரும்பி பார்க்கக் கூடாது. நினைக்கவும் கூடாது. அதுதான் வாழ்க்கைக்கு நல்லது என்று கூறியுள்ளார்.

 

SHARE