ஐஸ் கிரீம் திருடிய நபரை கண்டுபிடிக்க உதவினால் ரூ.7 லட்சம் பரிசு

253

 

அமெரிக்க நாட்டில் உள்ள கடை ஒன்றில் ஐஸ் கிரீமை திருடிச்சென்ற நபர்களை பிடிக்க உதவுபவர்களுக்கு ரூ.7 லட்சம் பரிசு வழங்கப்படும் என உரிமையாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நியூயோர்க் நகரில் பிரபல கோடீஸ்வரரான John Catsimatidis என்பவருக்கு சொந்தமான Gristedes என்ற ஐஸ் கிரீம் கடைகள் பல நகரங்களில் இயங்கி வருகின்றன.

எனினும், அண்மை நாட்களாக மர்ம நபர்கள் இவரது கடைகளை குறி வைத்து ஐஸ் கிரீம் பெட்டிகளை திருடிச்சென்று குறைந்து விலைக்கு விற்று வருகின்றனர்.

நியூயோர்க் நகரில் உள்ள இவரது ஒரு கடையில் ஆண் மற்றும் ஒரு பெண் ஆகிய இருவர் கடையில் புகுந்து ஐஸ் கிரீம் பெட்டிகளை திருடிச் செல்வது அங்குள்ள கண்காணிப்பு கமெராவில் பதிவாகியுள்ளது.

ஆனாலும், பொலிசாரால் இந்த மர்ம நபர்களை கைது செய்ய முடியவில்லை.

இந்நிலையில், ஐஸ் கிரீம் திருடர்களை கண்டுபிடிக்க உதவும் நபருக்கு 5,000 டொலர்(7,27,100 இலங்கை ரூபாய்) பரிசு வழங்கப்படும் என தொழிலதிபர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இந்த அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து பொலிசாருக்கு இதுவரை 250 புகார்கள் வந்துள்ளன. இவற்றின் அடிப்பையில் 130 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

 

SHARE