ஈராக் நாட்டில் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் வெடிபொருள் கிடங்கின் மீது அந்நாட்டின் ராணுவ கூட்டுப்படை தாக்குதல் நடத்தியது. அந்நாட்டின் மோசூல் நகரில் உள்ள பஷிகா நகரில் தீவிரவாதிகளின் வெடிபொருட்கள் கிடங்கு உள்ளது. அங்கு இன்று ராணுவத்தினர் வான்வழி தாக்குதல் நடத்தினர். ஈராக் மற்றும் குர்திஷ் விமான படையினர், தீவிரவாதிகளின் வெடி பொருள் கி்டங்கின் மீது குண்டுமழை பொழிந்தனர்.
இதுபற்றி பேசிய பகுதிவாசி ஒருவர் தகவல் அளித்ததன் அடிப்படையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், எப்போது வேண்டுமானாலும் மீண்டும் தாக்குதல் நடத்தப்படலாம் என்றார். ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு கடந்த 2014-ம் ஆண்டு முக்கிய நகரான மோசூல் நகரை அரசு தரப்பிடமிருந்து கைப்பற்றியது. அந்நகரை மீட்கும் முயற்சியில் தற்போது கூட்டு படைகள் ஈடுபட்டுள்ளன.