ஐசிஸ் தீவிரவாதிகள் மற்றும் தமிழக–சென்னைதொடர்புகள் – உள்ளூர் தீவிரவாதம் என்றாலும்ஜிஹாதி மனப்பாங்கு அதிரவைக்கிறது – கணினிவேலை பார்த்தாலும், ஜிஹாதியில் குறியாக இருந்ததீவிரவாதி (3)
கொட்டிவாக்கத்தில் வசித்த தா. சுவாலிக் முகம்மதுஎன்ற யூசுப் என்ற அபு ஹசனா (26): பிடிபட்ட ஐந்து பேரையும் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் உள்ள சிறப்பு நுண்ணறிவு பிரிவு போலீஸ் அலுவலகத்தில் வைத்து, என்.ஐ.ஏ போலீஸ் அதிகாரிகள் கடந்த இரு நாட்களாக விசாரணை நடத்தி வந்தனர். நேற்று 3வது நாளாக 5 பேரிடமும் விசாரணை நடத்தினர். 5 பேரில் இரண்டு பேர், கோழிக்கோட்டில் கைதான ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் பேஸ்புக் பக்கத்தின் சாட் (தகவல் பரிமாறும் தனிப்பட்ட பிரிவு) மூலம் பல்வேறு தகவல்களை பரிமாறிக் கொண்டுள்ளனர். மேலும், பரிமாறிக்கொண்ட தகவல்களை உடனுக்குடன் அழித்துள்ளனர்[1]. இவர்களில் ஒருவர் கேரள மாநிலம் திருச்சூர் வெங்கநல்லூரைச் சேர்ந்த தா. சுவாலிக் முகம்மது என்ற யூசுப் என்ற அபு ஹசனா (26) என்பவரும் ஒருவர். தற்போது, இவர் சென்னை கொட்டிவாக்கம் அருகே உள்ள எம்.ஜி.ஆர்.நகர் அன்னை சத்யா தெருவில் குணசேகர் என்பவரில் வீட்டில் குடும்பத்துடன் வாடகைக்கு வசித்து வந்தார். இதையடுத்து, சுவாலிக் முகம்மது வீட்டில் 03-10-2016 திங்கள்கிழமை அதிகாலை திடீர் சோதனை நடைபெற்றது. அப்போது அவரது மனைவி ஜிம்சின்னா (24), இரண்டரை வயது மகன் ஜின்னா ஆகியோர் இருந்தனர். இதில் ஜிம்சின்னாவிடம் சுமார் 3 மணி நேரமும், வீட்டின் உரிமையாளர் குணசேகர் குடும்பத்தினரிடமும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். பின்னர், சில முக்கிய ஆவணங்களையும், ஜிம்சின்னா பயன்படுத்திய செல்லிடப்பேசி, சுவாலிக் முகம்மது பயன்படுத்திய மடிக்கணினி ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சென்னை– கொட்டிவாக்கத்தைச் சேர்ந்த முகம்மதுஎன்ற யூசுப் என்ற அபு ஹசனாவிடம் விசாரணை: விசாரணையில் முகம்மது என்ற யூசுப் என்ற அபு ஹசனா குறித்து கிடைத்த தகவல்கள் குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் கூறியதாவது:- 12-ஆம் வகுப்பு வரை படித்துள்ள அவர், 2010-ஆம் ஆண்டு முதல் சென்னையில் வசிக்கிறார். பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிந்துள்ள அவர், திருவல்லிக்கேணியில் மேன்சன்களிலும், கொட்டிவாக்கத்தில் தனது நண்பர்களின் அறைகளிலும் தங்கியுள்ளார். ராயப்பேட்டை ஓயிட்ஸ் சாலையில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் இயங்கும் ஒரு தனியார் ரிசார்ட் அலுவலகத்தில் (மஹிந்த்ரா கிளப்[2]) 2013ஆம் ஆண்டு முதல் கணினி இயக்குபவராக வேலை செய்து வந்திருக்கிறார். வேளச்சேரியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்தபோது, கேரள கோழிக்கோடைச் சேர்ந்த ஜிம்சின்னாவை காதலித்து 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துள்ளார். பின்னர், கொட்டிவாக்கம் எம்.ஜி.ஆர். நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். அப்போது, பிரசவத்துக்காக 2014ஆம் ஆண்டு ஜிம்சின்னா கோழிக்கோட்டுக்கு சென்றபோது, முகம்மது வீட்டை காலி செய்துவிட்டு தனது நண்பர்கள் அறையில் தங்கினார். இந்த நிலையில், கடந்த ஜூனில் சென்னைக்கு திரும்பி வந்தபோது, குணசேகரின் வீட்டின் முதல் தளத்தில் உள்ள வீட்டை மாதம் ரூ.7 ஆயிரம் வாடகைக்கு எடுத்து வசித்து வந்தார்.
முகம்மது என்ற யூசுப் என்ற அபு ஹசனா கத்தார்செல்ல திட்டம்: வாரத்துக்கு இரு முறை வெளியூருக்கு செல்லும் அவர், வேலைக்கு சரியாக செல்லாமல் இருந்துள்ளார். சந்தேகக்குரிய வகையில் சிலர் அடிக்கடி இவரை பார்த்துவிட்டு செல்வார்களாம். ஒரு மாதத்துக்கு முன்பு வெளிநாடு செல்ல இருப்பதால், தனது குடும்பத்தை திருச்சூரில் வைத்துவிட்டு, வீட்டை காலி செய்ய உள்ளதாக குணசேகரிடம் தெரிவித்துள்ளார். அதேவேளையில் கத்தார் நாட்டுக்கு செல்வதற்குரிய ஏற்பாடுகளை செய்து வந்துள்ளார். கத்தாருக்கு சென்று, ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஆதிக்கம் இருக்கும் சிரியாவுக்கு தப்பிச் சென்று ஆயுதப் பயிற்சி பெற திட்டமிட்டிருந்துள்ளார். இந்த நிலையில், தென் மாநிலங்களில் ஏதேனும் சதிச் செயல் நடத்த திட்டமிருந்தார்களா என்பது குறித்து விசாரணை நடைபெறுகிறது என்றனர்.

முகநூலில் வளர்ந்த தொடர்பு தீவிரவாதத்திற்கு தான்சென்றுள்ளது: முகநூல் (ஃபேஸ்புக்) மூலம் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தினரிடம் சுவாலிக் முகமது தொடர்பு வைத்திருந்தது விசாரணையில் தெரியவந்திருக்கிறது. இதன்வாயிலாகவே அவர் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தினரின் குறிப்பிட்ட பக்கத்தை பின் தொடர்ந்துள்ளார். அப்போது, சுவாலிக் முகம்மதுவை தொடர்பு கொண்டு பேசிய அந்த இயக்கத்தினர் பேச்சில், மூளை சலவை செய்யப்பட்ட சுவாலிக் முகம்மது காலப்போக்கில் இணைந்து தீவிரமாக செயல்பட்டிருப்பது என்.ஐ.ஏ. விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரது முகநூல் நண்பர்கள், சந்தேகம்படும்படியான தொடர்பில் உள்ளவர்கள் குறித்து விசாரணை நடக்கிறது.
நம்ப முடியவில்லை – என்று நண்பர்கள் கூறியது:சுவாலிக் முகம்மது ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் இருந்ததாக கைது செய்யப்பட்டிருப்பதை தன்னால் நம்ப முடியவில்லை என அவரது நீண்ட கால நண்பரும், மென்பொறியாளருமான மிர்ஷாத் தெரிவித்தார். 01-10-2016 (வெள்ளி) – ஆறு பேர் கைது, 02-10-2016 (சனி) – கோயம்புத்தூரில் ஐந்து பேர் வீட்டில் சோதனை, 03-10-2016 (ஞாயிறு) – கடையநல்லூரில் சோதனை, 04-10-2016 (திங்கள்), 05-10-2016 (செவ்வாய்), 06-10-2016 (புதன்) 07-10-2016 (வியாழன்), 08-10-2016 (வெள்ளி) நாட்களில் விசாரணை, 09-10-2016 (சனிக்கிழமை) – 16 இளைஞர்களிடம் விசாரணை நடந்தது, 10-10-2016 (ஞாயிற்றுக்கிழமை) எர்ணாகுளத்தில் – சுபானி ஹாஜி மொஹித்தீன் மார்கெட் ரோட், தொடுபுழாவில் உள்ள அவனது வீட்டிற்கு கூட்டிச் சென்றனர்[3]., இப்படி எல்லாமே நம்ப முடியாத அளவுக்கு தான் உள்ளன. ஆனால், குண்டுகள் வெடிக்கின்றன, அப்பாவி மக்கள் இறக்கின்றானர் என்பது உண்மைதானே? விசாரணையில் அவனது உறவினர்களுக்கு, இவனது ஐ.எஸ் தொடர்புகள் இருந்தது தெரிய வந்தது. அவனது வீட்டிலிருந்து அவன் மீது குற்றஞ்சாட்டுவதற்கு உபயோகமான ஆவணங்கள் கைப்பற்றப் பட்டன. அவன் இராக்கில் உள்ள மோசூலுக்கு அழைத்துச் செல்லப் பட்டு, பயிற்சி கொடுக்கப்பட்டது. எல்லா வசதிகளுடன் மாதம் $100 (சுமார்ரூ.8,000) கொடுக்கப்பட்டது[4], முதலிய விவரங்கள் தெரிய வந்தன[5].
07-10-2016 அன்று கோயம்புத்தூரில் விசாரணை[6]: கோயம்புத்தூரில் 11 அபு பஸீரின் தொடர்பு கொண்ட இளைஞர்கள் விசாரிக்கப்பட்டனர். அவன் மூலம் ஒருவேளை ஐசிஸ் தொடர்புகள் இருக்கக்கூடுமோ என்று, பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்-அப், செல்போன் எண்கள் போன்றவற்றில் தொடர்புடையவர்களிடம் தான் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பஸீர் உக்கடத்தில், ஜீ.எம். நகரில் தங்கியிருந்தபோது இந்த இளைஞர்களுக்கு கவர்ச்சிகரமான வேலைவாய்ப்புகளை ஆங்கிக் கொடுக்கிறேன் என்று வாக்குக் கொடுத்ததாகத் தெரிகிறது. அதை வைத்துதான், அவர்கள் விசாரிக்கப்பட்டனர். ஆனால், தீவிரவாதத்திற்கும், அவர்களது வேலைதேடுதலுக்கும் சம்பந்தம் இல்லை என்றதால், அவர்கள் அனுப்பப்பட்டனர்[7].
© வேதபிரகாஷ்
13-10-2016