ஐ.எஸ் தீவி­ர­வாதிகளுடன் 30 க்கும் மேற்­பட்ட இலங்கையர்கள் தொடர்பு

165

இஸ்­லா­மிய தீவி­ர­வாத அமைப்­பாக செயற்ப­டு­கின்ற ஐ.எஸ். அமைப்­பினர் உரு­வாக்­கி­யுள்ள இஸ்­லா­மிய இராஜ்­ஜி­யத்தின் வரை­ப­டத்தில் இலங்­கையும் இணைக்­கப்­பட்­டுள்­ ள­தாக பொது­பல சேனா அமைப்பு தெரி­வித்­தது.

தற்­கா­லத்தில் 30 க்கும் மேற்­பட்ட இலங்கை இஸ்­லா­மி­யர்கள் குறித்த அமைப்­புடன் தொடர்­பு­களை பேணி வரு­கின்­றன . எனவே இது குறித்து சங்க சபைகள் இணைந்து விசேட அறிக்­கை­யொன்றை விரைவில் வெளி­யிடும் என அவ்­வ­மைப்பின் நிறை­வேற்று அதி­காரி டிலந்த விதா­னகே தெரி­வித்தார்.

பொது­ப­ல­சேனா அமைப்பின் அலு­வ­ல­கத்தில் நேற்று இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில்,

தற்­கா­லத்தில் பொது­பல சேனா­வா­னது ஐ.எஸ் அமைப்பு போன்ற ஒரு இயக்கம் என கூறப்­ப­டு­வதை அவ­தா­னித்தோம். இந்­நி­லையில் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை வெளி­யான பிர­தான பத்­தி­ரிகை ஒன்றில் ஐ. எஸ் அமைப்பு அமெ­ரிக்க தூத­ர­கத்­திற்கு தாக்­குதல் நடத்­த­வி­ருப்­ப­தாக கூறப்­பட்­டி­ருந்­தது.

எமது அமைப்பு இந்த விட­யத்­தினை 2013 ஆம் ஆண்­டி­லேயே கூறி­யி­ருந்­தது. இருப்­பினும் பாது­காப்பு தரப்­புக்கள் அதனை கருத்­திற்­கொள்­வில்லை. 2012 ஆம் ஆண்டில் நாம் பொது­பல சேனா அமைப்பை ஆரம்­பிக்­கும்­போது இந்த பிரச்­சினை பூதா­க­ர­மாக காணப்­பட்­டது.

அதோபோல் மத்­திய கிழக்­கிற்கு சென்­றுள்ள சிலர் எமது அமைப்­பினை தொடர்பு கொண்டு இங்­கி­ருந்து செல்லும் இஸ்­லா­மி­யர்கள் மூளைச்­ச­லவை செய்து தீவி­ர­வாத அமைப்­புக்­க­ளுடன் இணை­வ­தற்­கான தயார்­ப­டுத்­தல்­க­ளுக்கு உள்­ளாக்­கப்­ப­டு­கின்­றார்கள் என் தெரி­விக்­கின்­றனர்.

இருப்­பினும் எமது நாட்­டி­லுள்ள சகல முஸ்­லிம்­க­ளையும் தீவி­ர­வா­திகள் என்று நாங்கள் சுட்­டிக்­காட்­ட­வில்லை. சில முஸ்லிம் குடும்­பஸ்­தர்கள் தமது பிள்­ளை­களை சவூதி அரே­பியா உள்­ளிட்ட நாடு­க­ளுக்கு அனுப்­பிய பின்னர் அவர்கள் எமது அலு­வ­ல­கத்­திற்கு வந்து தமது பிரச்­சி­னை­களை கூறு­கின்­றார்கள்.

அதன் பின்னர் தான் நாம் இது­கு­றித்து அவ­தானம் செலுத்­தினோம். கடந்த அர­சாங்­கத்தின் காலத்தில் இது குறித்து பெரிதும் அவ­தானம் செலுத்­தப்­ப­ட­வில்லை. காரணம் ஐ.நா. விவ­கா­ரத்தின் போது இலங்­கைக்கு அரே­பிய நாடுகள் பெரிதும் உத­வி­யதால் கடந்த அர­சாங்கம் அவர்­க­ளுடன் நட்­பு­றவை பேணி­யது.

யுத்­தத்­தினை முடித்த பின்னர் எந்த தீவி­ர­வாத அமைப்பு எம்மை எதிர்த்­தாலும் அவர்­க­ளுடன் போரா­டுவோம் என்ற மன­நி­லையில் பாது­காப்பு தரப்­புக்­களும் இருந்­தன .

அதனால் கடந்த அர­சாங்­கத்­தினால் இஸ்­லா­மிய இன­வா­திகள் பற்றி தேட­வில்லை என்று கூற முடி­யாது. காரணம் அந்த நாட்­களில் இஸ்­லா­மிய இன­வாதம் பற்றி தேடு­வ­தற்கு தனி­யான ஒரு அமைப்பு இரா­ணு­வத்­தினுல் இருந்­தது.

அளுத்­கமை சம்­ப­வத்தின் பின்னால் ஐ. எஸ் அமைப்பு

அதேபோல் அளுத்­த­கமை சம்­ப­வத்தின் போது பொது­பல சேனா அமைப்பு கல­வரம் செய்­தாக கூறப்­ப­டு­கின்­றது. ஆனால் எமது அமைப்பு அங்கு செல்லும் முன்பே காத்­தான்­கு­டி­யி­லுள்ள ஐ.எஸ் அமைப்­புக்கு ஆத­ர­வா­னர்கள் அங்கு பஸ்­களில் கொண்டு வந்து இறக்­கப்­பட்­டி­ருந்­தனர். அதன் பின்னர் பொது­பல சேனா அமைப்பின் கல­வரம் என இந்த விடயம் உலக நாடு­க­ளுக்கு பரப்­பப்­பட்­டது.

ஐ.எஸ் அமைப்பின் வரை­ப­டத்தில் இலங்கை

எவ்­வா­றா­யினும் ஐ.எஸ் அமைப்­பினர் உரு­வாக்­க­வுள்ள இஸ்­லா­மிய இராஜ்­ஜிய வரை­ப­டத்தின் ஒரு மூலையில் இலங்­கையும் உள்­ளது. மேலும் இலங்­கையில் 30 க்கும் மேற்­பட்ட இஸ்­லா­மி­யர்கள் ஐ.எஸ்.ஐ. எஸ் தீவி­ர­வாத அமைப்­புடன் தொடர்பில் இருப்­ப­தாக பிர­த­ரரும் அமைச்சர் விஜே­தாஸ ராஜ­பக்­சவும் பாரா­ளு­மன்­றத்தில் கூறி­யி­ருந்­தார்கள். இருப்­பினும் 30 க்கும் மேலா­ன­வர்கள் அவ்­வ­மைப்­புடன் தொடர்பை பேணி­வ­ரு­கின்­றனர் என்­பதே நிதர்­ஷ­ன­மாகும்.

advertisement

சங்க சபை­யினர் விசேட கூட்­ட­றிக்கை விடுவர்

அதனால் பிரிந்­தி­ருந்த பிர­தான மகா சங்கத்தினரும் கூட ஒன்றிணைந்து எமக்கான முக்கியமான அறிக்கையொன்றை மேற்படி விடயங்கள் தொடர்பில் வெளியிடவுள்ளனர். மல்வத்து பீடமும் இணைந்து முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிடும் .

அதேநேரம் கிழக்கு மா காணத்தில் அமைக்கப்பட்டு வருகின்ற இஸ்லாமிய பல்கலைக்கழகமும் எதிர்வரும் நாட்களில் ஐ.எஸ். ஐ.எஸ் அமைப்பின் ஆக்கிரமிப்புக்கு இலக்காகும் சாத்தியங்கள் உள்ளன என்றார்.

SHARE