ஐஎஸ் தீவிரவாதிகள் எப்படி குண்டு தயாரிக்கிறார்கள் என்று அவர்களிடமிருந்து தப்பிய 8 வயது சிறுமி அதிர்ச்சி தரக்கூடிய தகவல்களை கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யாசிதி பிரதேசத்தை ஐ.எஸ் தீவிரவாதிகள் கைப்பற்றிய பின்பு, அம்மக்கள் பல வித இன்னல்கள் அனுபவித்து வந்துள்ளனர்.
அவர்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் வெட்டிக் கொல்லப்பட்டு, பெண்கள் கடத்தப்பட்டனர். கடத்தப்பட்ட பெண்கள் இக்குழுவினரால் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டு அடிமைகளாக நடத்தப்பட்டனர்.
யாசிதி குழந்தைகள் சிலர் அடிப்படை வாத மத பள்ளிகளுக்கு வற்புறுத்தலாக அனுப்பிவைக்கப்பட்டனர். மேலும் சில குழந்தைகள் குண்டு தயார் செய்வதற்கும் பயன்படுத்தப்பட்டனர்.
இக்குழந்தைகளுக்கு தாக்குதல் நடத்துவதற்கு முன்னர் ஐ.எஸ் இயக்கத்தின் பாடல் ஒன்றையும் கற்றுத்தந்துள்ளனர்.
அப்பாடல் பாடினால் எங்கோ ஒரு இடத்தில் ஐ.எஸ் தீவிரவாதிகளால் தாக்குதல் நடக்கப்போகிறது என்று அர்த்தம். இப்பாடல் பாடுவதில் அக்குழந்தைகள் கைதேர்ந்தவர்களாகவே உள்ளனர்.
நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ள ஐ.எஸ் இயக்கத்தில் இருந்து தப்பிய 8 வயது சிறுமியின் பெயர் தான் சிலோடா.
அவர், தமது தாயாருடன் ஒரு வருடமாக ஐ.எஸ் தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் இருந்ததாகவும், அவர்கள் சொல்கின்ற வேலையை செய்ய வில்லை என்றால் கொலை செய்துவிடுவோம் என மிரட்டுவார்கள் எனவும் கூறினார்.
குண்டுகள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீடுகளில் தயாரிப்போம். அது தங்களுக்கே தெரியாது. குண்டு தயாரிப்பதற்கு சர்க்கரை கட்டி மாதிரி ஒரு உருண்டை இருக்கும், அதை மஞ்சள் திரவத்தில் முக்கி, அதன் பின்னர் கருப்பு நிற பிளாஸ்டிக்கால் சுற்றி, வயர் மற்றும் மின்னணு வயரை அதில் சொருகுவோம் என தெரிவித்தார். ஒவ்வொரு நாளும் ஒரு யுகம் போன்று இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
சிலோடா தாயார் கூறியதாவது, ஐ.எஸ் இயக்கத்தினர் தன்னிடம் வந்து குழந்தையை எவ்வாறு வளர்க்க வேண்டும் எனவும், குரான்களை படிக்க சொல்லியும் வற்புறுத்துவார்கள்.
யாசிதி மக்களுக்கு படிக்கத் தெரியாத காரணத்தினால் தங்களை முயன்ற அளவுக்கு படிக்கச் சொல்லி வற்புறுத்துவார்கள் எனவும் தெரிவித்தார்.
மேலும் தமது மகள் அழகாக இருப்பதால், அவளை ஐஎஸ் இயக்கத்திற்கு கொடுத்துவிடு என்று மிரட்டினார்கள். ஆனால் நாங்கள் அதிர்ஷ்டவசமாக அவர்களிடமிருந்து தப்பிவிட்டோம் என கூறினார்.
இச்சிறுமி போல் நூற்றுக்கணக்கான குழந்தைகள் ஐஎஸ் தீவிரவாதிகளிடம் சிக்கி தவிப்பதாகவும் கூறப்படுகிறது.
