ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் இணைந்து கொண்ட கேரள தம்பதியினர் முன்னதாக இலங்கையில் தங்கியிருந்தனர் .

245

18-1466192754-isis-flag3-600

ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் இணைந்து கொண்ட கேரள தம்பதியினர் அதற்கு முன்னதாக இலங்கையில் தங்கியிருந்தனர் என தெரிவிக்கப்படுகிறது.

இரண்டு மாதங்கள் இலங்கையில் தங்கியிருந்ததன் பின்னரே அவர்கள் தீவிரவாத அமைப்பில்இணைந்து கொண்டுள்ளதாக புலனாய்வு விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

நீர்கொழும்பில் காணப்படும் ஓர் மத வழிபாட்டு கற்கை நிலையத்தில் இவர்கள் தங்கியிருந்தனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் இஸ்லாமிய கற்கைகளை மேற்கொண்டு பின்னர் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் இருப்பிடங்களுக்கு செல்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையிலிருந்து செல்லும் போது பாரிய பாதுகாப்பு கெடுபிடிகள் இருப்பதில்லை என்பதனால் இலங்கையை அவர்கள் விரும்புவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தகவல்கள் குறித்து விசாரணைகள் நடத்தப்பட்டதாகவும் அவ்வாறான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, குறித்த மத வழிபாட்டு கற்கை நிலையம் மிகவும் சிறியது எனவும் அவ்வாறு வெளிநாட்டவர்கள் எவரும் கற்கைக்காக வந்ததாக தெரியவில்லை எனவும் ஜமயதுல் உலமா சபையின் செயலாளர் மௌலவி முபாரக் தெரிவித்துள்ளார்.

SHARE