ஐ.தே.கவில் மேலும் பல முஸ்லிம்களுக்கு வாய்ப்பு வழங்குமாறு ரணிலிடம் கோரிக்கை

361

 

எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் மேலும் பல முஸ்லிம்களுக்கு வேட்புமனுக்கள் வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Ranil-Wickramasinghe

கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் இந்தக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடிதம் ஒன்றின்மூலம் இந்தக்கோரிக்கையை இலங்கை முஸ்லிம் பேரவை வலியுறுத்தியுள்ளது. முஸ்லிம் சமூகம்,  ஐக்கிய தேசியக்கட்சிக்கே அதிகளவில் வாக்களித்து வருவதாக அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன்படி கண்டி, கொழும்பு, களுத்துறை, குருநாகல் மற்றும் புத்தளம் மாவட்டங்களில் மேலும் முஸ்லிம்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவேண்டும் என்று சபை கோரியுள்ளது.

SHARE